- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாண்டியாவை கழற்றி விட்டு பிரிந்த மனைவி.. குழந்தை யாருடன் இருப்பார்? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு ஹர்திக் பாண்டியா முக்கிய பங்காற்றினார். கடந்த 2023 உலகக் கோப்பையில் காயத்தை சந்தித்து வெளியேறிய அவர் இந்திய அணிக்காக முழுமையாக விளையாடுவதில்லை. அதனால் பணத்துக்காக மட்டுமே விளையாடுவார் என்று ரசிகர்களின் விமர்சனங்களை சந்தித்த பாண்டியா 2024 ஐபிஎல் தொடரில் சுமாராக விளையாடி மும்பையின் தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

குறிப்பாக மும்பை கிரிக்கெட் அணியின் கேப்டனாக 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவுக்கு பதிலாக பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். அதனால் மும்பை ரசிகர்களே பாண்டியாவை கிண்டலடித்து எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்தனர். இருப்பினும் அதற்கெல்லாம் அசராத பாண்டியா 2024 டி20 உலகக் கோப்பையில் சிறந்த ஆல் ரவுண்டராக விளையாடி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

- Advertisement -

பாண்டியாவுக்கு டாட்டா:
குறிப்பாக ஹென்றிச் க்ளாஸெனை தக்க சமயத்தில் அவுட்டாக்கிய அவர் கடைசி ஓவரில் டேவிட் மில்லரை அவுட்டாக்கி இந்தியாவுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதனால் களத்திலேயே கண்ணீர் விட்ட அவர் தாம் பணத்துக்காக மட்டும் விளையாடுபவன் அல்ல என்பதை நிரூபித்தார். அதன் காரணமாக மீண்டும் ரசிகர்களின் அன்பை பெற்ற பாண்டியாவின் வாழ்வில் அனைத்தும் நல்லதாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஐபிஎல் தொடரின் சுமாராக செயல்பட்டதால் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நட்டாஷா அவரைப் பிரிந்து செல்வதாக செய்திகள் வலம் வந்தன. அந்த சூழ்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய வீரர்கள் தங்களுடைய மனைவியுடன் கொண்டாடிய நிலையில் பாண்டியா மட்டும் தனது மகனுடன் கொண்டாடியது சந்தேகத்தை அதிகரித்தது. இந்நிலையில் அந்த சந்தேகங்கள் உண்மையாகியுள்ளன.

- Advertisement -

ஆம் தம்மை விட்டு தமது மனைவி நட்டாஷா பிரிந்து சென்று விட்டதாக ஹர்திக் பாண்டியா அதிகாரப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “4 வருடங்கள் ஒன்றாக இருந்த பின் நட்டாஷாவும் நானும் பரஸ்பரமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். நாங்கள் நன்றாக இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் கொடுத்தோம். இது எங்கள் இருவருக்கும் சிறந்த நலன் என்று நம்புகிறோம்”

இதையும் படிங்க: வேலையை ஆரம்பித்த கம்பீர்.. சிஎஸ்கே வீரருக்கு இடம்.. ரோஹித் தலைமையில் இலங்கை ஒருநாள் தொடருக்கான அணி

“நாங்கள் ஒன்றாக அனுபவித்த மகிழ்ச்சி பரஸ்பரம், மரியாதை மற்றும் தோழமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய கடினமான முடிவு இது. எங்கள் மகன் அகஸ்தியாவுக்காக ஆசீர்வதிக்கப்படுகிறோம். அவர் எங்கள் இருவரின் வாழ்வின் மையத்திலும் தொடர்ந்து இருப்பார். அவர் மகிழ்ச்சியுடன் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் வழங்குவதை உறுதி செய்ய ஒத்துழைப்போம். இந்தக் கடினமான நேரத்தில் எங்களுக்கு தனியுரிமை வழங்க உங்கள் ஆதரவையும் புரிதலையும் நாங்கள் கேட்கிறோம். பாண்டியா-நடாஷா” என்று கூறியுள்ளார். அதனால் பாண்டியாவுக்கு ரசிகர்கள் பரிதாபத்துடன் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -