15 நாளில் 9 டூ 2வது இடம்.. லக்னோவை ஈஸியா தோற்கடிக்க இதான் காரணம்.. மும்பை கேப்டன் பாண்டியா மகிழ்ச்சி

Hardik Pandya
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி 45வது போட்டி நடைபெற்றது. மதியம் 3.30 மணிக்கு துவங்கி மும்பையில் நடந்த அப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோவை 54 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதில் முதலில் விளையாடிய மும்பைக்கு ரியான் ரிக்கல்டன் 58, சூரியகுமார் யாதவ் 54 வில் ஜேக்ஸ் 29, கோர்பின் போஸ்க் 20, நமன் திர் 25* ரன்கள் எடுத்தார்கள்.

அதனால் மும்பை 20 ஓவரில் 215/7 ரன்கள் எடுத்த நிலையில் லக்னோவுக்கு அதிகபட்சமாக ஆவேஸ் கான், மயங் யாதவ் தலா 2 வெற்றிகளை சாய்த்தார்கள். அடுத்து விளையாடிய லக்னோ ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஆயுஸ் பதோனி 35, மிட்சேல் மார்ஷ் 34 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

மிரட்டும் மும்பை:

மும்பைக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 4, ட்ரெண்ட் போல்ட் 3, வில் ஜேக்ஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். இதையும் சேர்த்து 6வது வெற்றியைப் பெற்ற மும்பை புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றை நெருங்கியுள்ளது. சொல்லப்போனால் ஏப்ரல் 12ஆம் தேதி ஒன்பதாவது இடத்தில் திண்டாடிய மும்பை அடுத்த 15 நாட்களில் தொடர்ந்து 5 வெற்றிகளைப் பெற்று 2வது இடத்திற்கு வந்துள்ளது.

மறுபுறம் லக்னோ 5வது தோல்வியை சந்தித்து 6வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்நிலையில் தங்கள் வீரர்கள் வெளிப்படுத்தும் அனைத்து செயல்பாடுகளும் சரியாக கிளிக் ஆவதே இந்த தொடர் வெற்றிகளுக்கு காரணம் என்று மும்பை கேப்டன் ஹர்டிக் பாண்டியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பாண்டியா மகிழ்ச்சி:

“நாங்கள் கொண்டிருக்கும் வேகத்தைத் தொடர்கிறோம். அனைவரும் கிளிக் செய்கிறார்கள். இன்று மைதானத்திற்கு வந்த பள்ளிக் குழந்தைகள் அற்புதமான சூழ்நிலையை உருவாக்கினர். அவர்களுக்காக இதை நாங்கள் செய்ததில் மகிழ்ச்சி. எங்கள் வீரர்கள் அனைவரும் தங்களது வாய்ப்பை எடுக்கிறார்கள். கோர்பின் போஸ் சரியான நேரத்தில் வந்து சிக்ஸர்களை அடித்தது போல் அனைவரும் அசத்தினார்கள்”

இதையும் படிங்க: 54 ரன்ஸ்.. 5க்கு 5.. லக்னோவை ஓடவிட்ட மும்பை சரித்திர சாதனை வெற்றி.. மலிங்காவை முந்தி பும்ரா வரலாற்று சாதனை

“பவுலர்கள் துல்லியமாக செயல்பட்டனர். அனைவரும் அசத்தக்கூடிய வீரர்களால் தான் நல்ல அணிகள் உருவாக்கப்படும். ரிக்கல்டன் முதல் போஸ்க் வரை என்னையும் சேர்த்து அனைவரும் வெற்றியில் பங்காற்றுகிறோம். தேவைப்படும் போது நான் பவுலிங் செய்கிறேன். இன்று போஸ்க் பவுலிங் செய்வதற்கு சரியான நேரம். இது கடினமான தொடர் என்பதால் இப்படியே செல்லக்கூடாது. இன்னும் நல்ல கிரிக்கெட்டை விளையாடி அடுத்தப் போட்டிக்கு தயாராகி வேகத்தைத் தொடர வேண்டும்” என்று கூறினார்.

Advertisement