காரணமெல்லாம் சொல்ல முடியாது, சஞ்சு சாம்சன் ஒரு அதிர்ஷ்டமில்லா கேஸ் – ரசிகர்களின் கேள்விக்கு பாண்டியா பதில்

Hardik Pandya Sanju Samson
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மழைக்கு மத்தியில் அசத்தலாக செயல்பட்ட இந்தியா 1 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்று அசத்தியுள்ளது. குறிப்பாக சமீபத்திய உலகக் கோப்பையில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் விளையாடிய இந்தியா கோப்பையை வென்றது பாராட்டுகளை பெற்றது. ஆனால் ரசிகர்களை பொறுத்த வரை இத்தொடரில் கோப்பையை வென்றும் மிகுந்த ஏமாற்றமாகவே காணப்படுகிறார்கள்.

INDia Hardik pandya

- Advertisement -

ஏனெனில் 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக சீனியர் வீரர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்குமாறு கிட்டத்தட்ட அனைத்து ரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கேற்றார் போல் இந்த தொடரில் இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டாலும் திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் மீண்டும் மீண்டும் சொதப்பிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

அதிர்ஷ்டமில்லா கேஸ்:

குறிப்பாக அறிமுகமான 2017 முதல் எப்போதுமே டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படாத ரிசப் பண்ட்டை காலம் காலமாக உள்ளங்கையில் தாங்கி வரும் இந்திய அணி நிர்வாகம் இந்த தொடரில் ராஜாவைப் போல் ஓப்பனிங் இடத்தில் களமிறங்கும் வாய்ப்பை கொடுத்தது. 2 போட்டிகளாக இருந்தாலும் மீண்டும் வழக்கம் போல அவர் சொதப்பிய நிலையில் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறுவார் என ஒட்டு மொத்த உலகமே அறிந்த ஷ்ரேயஸ் ஐயருக்கும் இத்தொடரில் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் அவர் மீண்டும் அதே ஷார்ட் பிட்ச் வலையில் சிக்கி ஆட்டமிழந்தார்.

Sanju-Samson

அதனால் கோபமடையும் ரசிகர்கள் ரிஷப் பண்ட்டை விட சமீப காலங்களில் அதிரடியாகவும் அதிகமான ரன்களை சேர்த்து நல்ல ஃபார்மில் இருப்பதுடன் ஷ்ரேயஸ் ஐயரை விட ஷார்ட் பிட்ச் பவுன்சர் பவுன்சர்களை சிக்ஸர்களாக பறக்க விடும் திறமை பெற்றுள்ள சஞ்சு சாம்சனுக்கு ஏன் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கடுமையாக விமர்சிக்கிறார்கள். அதை விட இதற்கு முந்தைய காலங்களில் வாய்ப்பு மறுக்கப்பட்டது கூட பரவாயில்லை ஆனால் தற்போது பாண்டியா – லக்ஷ்மன் ஆகிய புதிய கூட்டணி தலைமை தாங்கிய இத்தொடரிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டது ரசிகர்களை கொந்தளிக்க வைக்கிறது.

- Advertisement -

அந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தாலும் துரதிஷ்டவசமாக கொடுக்க முடியவில்லை என்று தெரிவிக்கும் கேப்டன் பாண்டியா உண்மையான காரணத்தை சொல்லாமல் மழுப்பியுள்ளார். இது பற்றி டி20 தொடருக்குப்பின் ரசிகர்கள் சார்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “இந்த தொடர் 3 போட்டிகளாக நடைபெற்றிருந்தால் சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருப்போம். ஆனால் சிறிய தொடரில் மாற்றங்கள் செய்வதில் நம்பிக்கை இல்லை என்பதே என்னுடைய தத்துவமாகும்”

Hardik-Pandya

“இருப்பினும் நான் எப்போதும் வீரர்களுக்கான கேப்டன். அவர்களுக்காக என்னுடைய அறை கதவு எப்போதும் திறந்திருக்கும் என்பதால் அவர்கள் என்னிடம் வெளிப்படையாக வந்து பேசலாம். குறிப்பாக சஞ்சு சம்சன் ஒரு துரதிஷ்டவசமான கேஸ். இத்தொடரில் நாங்கள் அவரை விளையாடியிருக்க வேண்டும் ஆனால் சில காரணங்களால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. மேலும் அவரது இடத்தில் நான் இருந்து தொடர்ச்சியாக பெஞ்சில் அமர்ந்தால் என்ன மனநிலையில் இருப்பேன் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அது மிகவும் கடினமானது”

“அந்த வகையில் வாய்ப்பு கொடுக்காததற்காக நான் யாரையும் சமாதானப்படுத்தவில்லை. அதே சமயம் அதை மனதில் வைத்துக் கொண்டு இருக்காமல் அனைவரும் அணியில் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதே முக்கியம். மேலும் வீரர்கள் மோசமாக உணர்ந்தால் நேரடியாக என்னிடமோ அல்லது பயிற்சியாளரிடமோ வந்து பேசலாம். நான் கேப்டனாக தொடரும் பட்சத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு அணியாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய குணமாகும்” என்று கூறினார்.

Advertisement