அவங்க பார்ட்டிக்கு வரலைன்னா ஜெய்க்க முடியாது.. மும்பை தோல்விக்கு காரணம் இது தான்.. கேப்டன் பாண்டியா வருத்தம்

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 29ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற 9வது போட்டியில் மும்பை அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் 196-8 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 63, கேப்டன் கில் 38, ஜோஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தனர்.

மும்பை அணிக்கு கேப்டன் ஹர்டிக் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்ததாக விளையாடிய மும்பை அணி 20 ஓவரில் முடிந்தளவுக்கு போராடியும் 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 48, திலக் வர்மா 39 ரன்கள் எடுத்த நிலையில் குஜராத்துக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர்.

- Advertisement -

மும்பை தோல்வி:

அதனால் குஜராத் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்து அசத்திய நிலையில் மும்பை அணி 2வது தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்தப் போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் சுமாராக செயல்பட்டு 15 – 25 ரன்கள் எக்ஸ்ட்ரா கொடுத்தது அல்லது சேமிக்க தவறியது தோல்விக்கு காரணமானதாக கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். தங்களுடைய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடாத வரை வெற்றி கடினம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “எங்கே தவறு நடந்தது என்பதை சொல்வது கடினமாக இருக்கிறது. பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் நாங்கள் 20 – 25 ரன்களை குறைவாக எடுத்தோம். களத்தில் நாங்கள் தொழில்முறையாக இல்லை. அடிப்படையான தவறுகளை செய்தது தோல்வியை கொடுத்தது. 20 – 25 ரன்கள் என்பது டி20 கிரிக்கெட்டில் அதிகப்படியானது”

- Advertisement -

பார்ட்டிக்கு வரணும்:

“குஜராத் அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். நிறைய ரிஸ்க் எடுக்காத அவர்கள் சரியான வழியில் விளையாடினார்கள். அதிரடியான ஷாட்டுகளை அடிக்காமல் ரிஸ்க் எடுக்காமலேயே அவர்கள் ரன்கள் குவித்தனர். அப்போதிலிருந்தே நாங்கள் அவர்களைப் பிடிக்க வேண்டியதாக இருந்தது. அது போன்ற நேரங்களில் நாங்கள் அனைவரும் பொறுப்பை எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்”

இதையும் படிங்க: 38 ரன்ஸ்.. நேருக்கு நேர் மோதிய சாய் கிசோரை திட்டிய பாண்டியா.. மும்பையை குஜராத் சாய்த்தது எப்படி?

“இப்போது தொடர் துவங்கி மட்டுமே இருக்கிறது. வெற்றிகளைப் பெற எங்களுடைய பேட்ஸ்மேன்கள் பார்ட்டிக்கு வர வேண்டும். அவர்கள் அதை விரைவாக செய்வார்கள் என்று நம்புகிறேன். இந்த பிட்ச்சில் ஸ்லோவான பந்துகள் மிகவும் கடினமான பந்துகளாகும். சில பந்துகள் பவுன்ஸ், சில பந்துகள் சூட்டிங் ஆகி வந்தன. அது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருந்தது. நான் பவுலிங் செய்தது போலவே குஜராத் பவுலர்கள் அசத்தினர்” என்று கூறினார்.

Advertisement