38 ரன்ஸ்.. நேருக்கு நேர் மோதிய சாய் கிசோரை திட்டிய பாண்டியா.. மும்பையை குஜராத் சாய்த்தது எப்படி?

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 29ஆம் தேதி அகமதாபாத் நகரில் 9வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் 20 ஓவரில் 196-8 ரன்கள் அடித்து அசத்தியது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் அரை சதமடித்து 63 (41) ரன்கள் குவித்தார்.

அவருடன் கேப்டன் சுப்மன் கில் 38, ஜோஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்த நிலையில் மும்பைக்கு அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் விளையாடிய மும்பைக்கு ரோகித் சர்மாவை 8 ரன்னில் போல்டாக்கிய சிராஜ் மறுபுறம் தடுமாறிய ரியான் ரிக்கல்டனை 6 ரன்னில் காலி செய்தார். அதனால் 35-2 என மும்பை ஆரம்பத்திலேயே தடுமாறியது.

- Advertisement -

போராடிய மும்பை:

அப்போது 3வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த திலக் வர்மா தடுமாற்றமாக விளையாடி 39 (26) ரன்னில் அவுட்டானார். அப்போது 13வது ஓவரை வீசிய தமிழக வீரர் சாய் கிஷோர் ராபின் மின்ஸை 3 ரன்னில் அவுட்டாக்கி மேலும் அழுத்தத்தை அதிகரித்தார். அதனால் எதிர்புறம் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா அதிரடி காட்ட முடியாமல் தடுமாறினார். அப்போது 15வது ஓவரை வீசிய சாய் கிசோருக்கு எதிராக 3வது பந்தில் பாண்டியா பௌண்டரி அடித்தார்.

அடுத்த பந்தை சிறப்பாக பவுலிங் செய்த சாய் கிஷோர் ரன் எதுவும் கொடுக்கவில்லை. தனது அருகிலேயே பாண்டியா அடித்த அந்தப் பந்தை கையில் எடுத்த சாய் கிஷோர் அவரை முறைத்தார். அதற்கு பாண்டியாவும் பதிலுக்கு முறைத்தார். அதற்கு சாய் கிசோரும் முறைத்து பதிலடி கொடுத்தார். அப்போது பிரபல ஆங்கில கெட்ட வார்த்தைப் பயன்படுத்தி “போய் பவுலிங்” செய் என்ற வகையில் பாண்டியா சொன்னார். அதனால் இருவருக்கும் இடையே வரவிருந்த வாக்குவாதத்தை நடுவர்கள் உள்ளேப் புகுந்து நிறுத்தினார்கள்.

- Advertisement -

குஜராத் வெற்றி:

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த சூரியகுமாரை 48 (28) ரன்களில் பிரசித் கிருஷ்ணா காலி செய்து அழுத்தத்தை உண்டாக்கினார். அடுத்த ஓவரிலேயே பாண்டியா 11 (17) ரன்னில் அவுட்டாகி மேலும் அழுத்தத்தை அதிகரித்தார். இறுதியில் நமன் திர் 18* (11), மிட்சேல் சான்ட்னர் 18* (9) ரன்கள் எடுத்துப் போராடியும் 20 ஓவரில் மும்பை 160-6 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

இதையும் படிங்க: ஒழுங்கா ஆடாம அது மேல பழி போடுவது ஆச்சர்யம்.. இதை மாத்தலன்னா சிஎஸ்கே ஜெய்க்க முடியாது.. புஜாரா அட்வைஸ்

அதனால் இந்த வருடம் மும்பை இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது. மறுபுறம் பவர் பிளே ஓவர்களில் மும்பையின் ஓப்பனிங் ஜோடியை காலி செய்த குஜராத் டெத் ஓவர்களிலும் அபாரமாக பவுலிங் செய்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தங்களது முதல் வெற்றியைப் பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா, முஹம்மது சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement