ஒழுங்கா ஆடாம அது மேல பழி போடுவது ஆச்சர்யம்.. இதை மாத்தலன்னா சிஎஸ்கே ஜெய்க்க முடியாது.. புஜாரா அட்வைஸ்

C Pujara
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ருதுராஜ் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது. அவரது தலைமையில் முதல் போட்டியில் மும்பையை தோற்கடித்த சென்னை 2வது போட்டியில் 17 வருடங்கள் கழித்து சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணியிடம் தோற்றது. அந்தப் போட்டியில் 197 ரன்களை துரத்திய சென்னை சுமாராக விளையாடி 146-8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

குறிப்பாக பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் அவரைத் தவிர்த்து எந்த பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடவில்லை. குறிப்பாக மிடில் ஆர்டரில் சாம் கரண், தீபக் ஹூடா, சிவம் துபே ஆகியோர் சிறப்பாக விளையாடவில்லை. தோனியும் கொஞ்சம் மேலே வந்து பேட்டிங் செய்ய மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்.

- Advertisement -

பழி போடாதீங்க:

அந்த சூழ்நிலையில் பெங்களூரு அணிக்கு எதிராக தோல்வியை சந்திக்க சேப்பாக்கத்தின் பிட்ச் தான் காரணம் என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் அதிருப்தியை வெளிப்படுத்தினார். கடந்த சில வருடங்களாகவே அதை தங்களால் சரியாக படிக்க முடியாததால் சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு சொந்த மண் சாதகம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் நன்றாக விளையாடாமல் பிட்ச் மீது பிளம்மிங் தோல்விக்கான பழியைப் போடுவது ஆச்சரியமளிப்பதாக முன்னாள் வீரர் செட்டேஸ்வர் புஜாரா விமர்சித்துள்ளார்.

மேலும் சாம் கரண், தீபக் ஹூடா போன்றவர்களால் சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் வலுவாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே அதை மாற்றாவிட்டால் கோப்பையை வெல்வது கடினம் என்று எச்சரிக்கும் புஜாரா இது பற்றி பேசியது பின்வருமாறு. “சிஎஸ்கே அணியில் நீங்கள் பிட்ச் பற்றி புகார் செய்ய முடியாது. பிட்ச்சில் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று பிளம்மிங் சொன்னால் அது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது”

- Advertisement -

புஜாரா அட்வைஸ்:

“பொதுவாக சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற அணிகள் தாங்கள் விரும்பும் பிட்ச்களை பெறுவார்கள். மற்ற அணிகள் விரும்பிய பிட்ச்களை பெறுவதற்கான செல்வாக்கை கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் இந்த 3 அணிகளும் காலம் காலமாகவே தங்களது சொந்த மண்ணில் இருக்கும் பிட்ச் சாதகமாக இருக்கும் வகையில் வேலை செய்து வருகின்றனர்”

இதையும் படிங்க: 196 ரன்ஸ்.. மும்பைக்கு எதிராக சாய் சுதர்சன் அசத்தல்.. கோட்டை அஹமத்பாத்தில் கில் முதல் வீரராக சாதனை

“சென்னை அணி வேகமாக ரன்கள் அடிப்பதற்கான வழியைக் கண்டறிய வேண்டும். அவர்களுடைய தற்போதைய டெம்ப்ளேட் வலுவான அணிகளுக்கு எதிராக அசத்தக்கூடியதாக இல்லை. நீங்கள் சிஎஸ்கே ரசிகராக இருந்தால் இந்த தோல்வி உங்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும். தோல்வி நிலையத்தின் அங்கம். ஆனால் இது போன்ற தோல்விகள் சிஎஸ்கே அணியில் ஆழமான தழும்பை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

Advertisement