ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 7ஆம் தேதி மும்பையில் 56வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்த குஜராத் 8வது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அதிகபட்சமாக வில் ஜேக்ஸ் 35, சூரியகுமார் யாதவ் 53, கோர்பின் போஸ்க் 27 ரன்கள் எடுத்த உதவியுடன் 156 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதைத் துரத்திய குஜராத்துக்கு அதிகபட்சமாக கில் 43, ஜோஸ் பட்லர் 30, ஃ ரூதர்போர்ட் 28 ரன்கள் எடுத்ததால் 18 ஓவரில் 132/6 ரன்கள் எடுத்தது. அப்போது மழை வந்ததால் 19வது ஓவராக குறைக்கப்பட்ட போட்டியில் கடைசி ஓவரில் குஜராத்துக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. தீபக் சஹர் வீசிய அந்த ஓவரில் ராகுல் திவாட்டியா 11*, ஜெரால்டு கோட்சி 12, அர்சத் கான் 1* ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினர்.
மும்பை தோல்வி:
குறிப்பாக கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட போது ஹர்திக் பாண்டியா ரன் அவுட் வாய்ப்பை தவற விட்டார். அதனால் அர்சத் கான் சிங்கிள் எடுத்து மும்பையின் 6 தொடர் வெற்றிகளை நிறுத்தி குஜராத்தை வெற்றி பெற வைத்தார். மும்பைக்கு அதிகபட்சமாக பும்ரா, போல்ட், அஸ்வனி குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தும் 5வது தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
இந்நிலையில் இப்போட்டியில் கேட்ச் அல்லது ரன் அவுட் மிஸ் செய்தது தோல்வியை கொடுக்கவில்லை மாறாக நோபால் வீசியதும், எக்ஸ்ட்ரா 20 ரன்கள் எடுக்க தவறியதுமே தோல்விக்கு காரணமாக அமைந்ததாக மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் மிகவும் சிறப்பாக போராடி அணியாக வெற்றியை நோக்கி எங்களை தள்ளினோம்”
பாண்டியா ஏமாற்றம்:
“இது 150 ரன்கள் மட்டுமே அடிக்கக்கூடிய பிட்ச் கிடையாது. அதில் நாங்கள் 20 – 25 ரன்கள் குறைவாக எடுத்தோம். அதே சமயம் போட்டி முழுவதும் போராடிய எங்களுடைய பவுலர்களுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். கேட்ச்களை விடுவது உங்களுக்கு பின்னடைவைக் கொடுக்கும். ஆனால் இன்று அது எங்களுக்கு பின்னடைவைக் கொடுக்கவில்லை”
இதையும் படிங்க: இரவு 12.30.. 7க்கு 7க்கு பரிதாப சாதனை தோல்வி.. மழையுடன் குஜராத்திடம் வெற்றியை மும்பை விட்டது எப்படி?
“ஆனால் நோபால் பந்துகள் பின்னடைவை கொடுத்தது. குறிப்பாக நான் வீசிய நோபால் மற்றும் கடைசி ஓவரில் வீசிய நோபாலும் பின்னடைவைக் கொடுத்தது. எங்களுடைய வீரர்கள் 120% செயல்பாடுகளை கொடுத்ததில் மகிழ்ச்சி. முதல் இன்னிங்ஸில் மைதானத்தில் அதிக ஈரம் இல்லை. ஆனால் இரண்டாவது பகுதியில் மழை வந்ததால் எங்களுக்கு கடினமான சூழ்நிலைகள் ஏற்பட்டது. அதில் நாங்கள் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விளையாடினோம்” என்று கூறினார்.



