என்னால முடியல ரோஹித் பாய்.. ப்ளீஸ் நீங்களே பாத்துக்கோங்க.. ரோஹித்தின் உதவியை நாடிய – ஹார்டிக் பாண்டியா (எதற்கு தெரியுமா?)

Rohit-and-Pandya
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ஹார்டிக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியின் போது தோல்வியை சந்தித்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கேலி, கிண்டலை ஏற்படுத்தியது. அதோடு நேற்று நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் மும்பை அணி தோல்வியை சந்தித்ததில் இருந்து பாண்டியா குறித்த செய்திகள் தான் அதிகம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அந்த வகையில் இந்த தொடரின் முதல் போட்டியில் ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்திருந்த வேளையில் முதல் வெற்றியை தேடி பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான எட்டாவது லீக் போட்டியில் பங்கேற்று விளையாடியது.

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வெளுத்து வாங்கி 277 ரன்கள் குவித்தது.

பின்னர் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்ததால் 31 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவை பாண்டியா பீல்டிங் செய்ய செட் செய்ய உதவிக்கு அழைத்தது பெரிய அளவில் கவனிக்கப்படும் விடயமாக மாறியது. ஏனெனில் முதல் போட்டியின் போது கவர் திசையில் நின்ற ரோகித் சர்மாவை பவுண்டரி லைனை நோக்கி பீல்டிங் செய்யுமாரு கைகாட்டி பாண்டியா பீல்டிங் மாற்றம் செய்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. முன்னாள் கேப்டனான ரோகித்தை எவ்வாறு அவர் அவமரியாதையாக நடத்தலாம் என்றெல்லாம் பேச்சு எழுந்தது.

இதையும் படிங்க : ஹைதராபாத் மைதானத்திலும் கெத்து காட்டிய ரோஹித் ரசிகர்கள்.. அசிங்கப்பட்ட பாண்டியா – நடந்தது என்ன?

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியின் வீரர்கள் சிக்ஸரும் பவுண்டரியுமாக வெளுத்து வாங்க களத்தில் கேப்டனாக என்ன செய்வது என்று புரியாமல் விழிபிதுங்கி நின்ற பாண்டியா ரோகித்திடம் பீல்டிங் செட் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது மீண்டும் பழைய கேப்டனாக மாறிய ரோகித் சர்மா பீல்டர்களை மாற்றி நிற்க வைத்தார். அதேபோன்று பாண்டியாவையும் பவுண்டரி லைனுக்கு சென்று நிற்குமாறு ரோஹித் பீல்டிங்கை செட் செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement