இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடைசியாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக விளையாடியிருந்தார். அதன்பின்னர் மீண்டும் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இதன் காரணமாக ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் முதன்மை அணிக்கு கம்பேக் கொடுக்க உள்ளார். அவரது இந்த வருகை இந்திய அணிக்கு பலம் சேர்த்துள்ளது என்றால் அது மிகையல்ல.
முதல் நபராக வரலாறு படைக்க காத்திருக்கும் ஹார்டிக் பாண்டியா :
ஏனெனில் டி20 போட்டிகளை பொருத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் கைகொடுக்கக் கூடிய வீரராக பாண்டியா இருக்கிறார். தனது கரியரில் காயம் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளால் சறுக்களை சந்தித்த பாண்டியா கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார்.
அதிலும் குறிப்பாக நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் போது இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அவர் இருந்ததால் அவர்மீது மீண்டும் ரசிகர்கள் அன்பை பொழிய துவங்கியுள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரிலும் அவர் தனது அசத்தலான பங்களிப்பை இந்திய அணிக்காக வழங்க காத்திருக்கிறார்.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரில் ஆல்ரவுண்டராக ஹார்டிக் பாண்டியா ஒரு புதிய மைல்கல் சாதனையை எட்டும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :
ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரானது டி20 போட்டிகளாக நடைபெற்ற போது அதில் 8 ஆட்டங்களில் பாண்டியா பங்கேற்று விளையாடியுள்ளார். அந்த எட்டு ஆட்டங்களிலும் 11 விக்கெட்டை கைப்பற்றிய அவர் பேட்டிங்கில் 83 ரன்களை குவித்துள்ளார். இதன் காரணமாக எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் அவர் மேலும் 17 ரன்களை அடிக்கும் பட்சத்தில் டி20 வடிவ ஆசிய கோப்பை போட்டிகளில் 100 ரன்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : தல தோனியின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பில் இருக்கும் சஞ்சு சாம்சன் – ஆசிய கோப்பையில் நிகழுமா?
இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பிடித்துள்ளதால் நிச்சயம் முதல் போட்டியிலேயே கூட இந்த சாதனையை அவர் நிகழ்த்த வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தங்களது முதலாவது லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து செப்டம்பர் 10-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



