- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பென் ஸ்டோக்ஸ் மாதிரி பாண்டியா திறமையானவர்.. ஆனா இதை செய்யாதது ஏமாற்றம்.. ஸ்காட் ஸ்டைரிஸ் ஆதங்கம்

நட்சத்திரம் இந்திய கிரிக்கெட் வீரர் பாண்டியா கடந்த 2016 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். குறுகிய காலத்திலேயே கபில் தேவ் இடத்தை நிரப்புவார் என்று ரசிகர்கள் நம்பும் அளவுக்கு அசத்திய அவரால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் விமர்சித்தார். ஆனால் 2018இல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமான பாண்டியா நாட்டிங்காம் போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார்.

அதனால் 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்கு தரமான ஆல் ரவுண்டர் கிடைத்து விட்டார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அதன் பின் சந்தித்த காயத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மொத்தமாக முழுக்கு போட்ட அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். அதிலும் சுமாரான ஃபிட்னஸை கொண்டிருப்பதால் அடிக்கடி காயத்தை சந்திக்கும் அவர் தொடர்ந்து விளையாடுவதில்லை.

- Advertisement -

பென் ஸ்டோக்ஸ் மாதிரி:
அதன் காரணமாக ஒரு கட்டத்தில் பணத்துக்காக மட்டுமே விளையாடுவார் என்ற விமர்சனத்தை பாண்டியா சந்தித்தார். ஆனால் 2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல ஆல்ரவுண்டராக முக்கிய பங்காற்றிய அவர் தம்முடைய தரத்தை நிரூபித்து ரசிகர்களின் அன்பை மீண்டும் பெற்றுள்ளார். இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் போன்ற திறமையைக் ஹர்திக் பாண்டியா கொண்டுள்ளதாக நியூஸிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் பாராட்டியுள்ளார்.

ஆனால் முழுமையான ஃபிட்னஸ் கடைபிடித்து 3 வகையான கிரிக்கெட்டிலும் பாண்டியா விளையாடாதது தமக்கு ஏமாற்றத்தைக் கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். எனவே அதில் பாண்டியா முன்னேற வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “மற்றவர்களைப் போலவே சாம்பியன் பாண்டியா நிறைய திறமைகளை கொண்டுள்ளார். அவர் பென் ஸ்டோக்ஸ் போன்ற திறமையை கொண்டவர்”

- Advertisement -

“அதற்கும் மேல் அவர் திறமையானவர் என்பதை சமீபத்திய செயல்பாடுகளில் பார்த்தோம். ஆனால் எனக்குப் பிடித்தார் போல் அவர் இன்னும் தொடர்ச்சியாக அசத்தவில்லை. அனைத்து நேரங்களிலும் களத்தில் விளையாடத் தயாராக இருந்து பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவதையே தற்போது பாண்டியாவிடமிருந்து இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கும் திறமையாகும்”

இதையும் படிங்க: சுப்மன் கில்லால் ஏமாறப்போகும் ஜஸ்ப்ரீத் பும்ரா.. பி.சி.சி.ஐ எடுக்கப்போகும் அதிரடி முடிவு – விவரம் இதோ

“அவர் தனது உடலை சரியாக்கி சிறந்த ஆல் ரவுண்டராக டாமினேட் செய்வதையே நானும் பார்க்க விரும்புகிறேன். பவுலிங் மிகவும் கடினமான வேலையாகும். இருப்பினும் அவரிடம் அந்த அனைத்து திறமையும் இருக்கிறது. எனவே ஒரு சில ஓவர்களை வீசுபவராக அல்லாமல் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டிலும் முழுமையாக அசத்தக்கூடிய பாண்டியவையே நான் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார். சொல்லப்போனால் ஃபிட்டாக இல்லாததால் ஹர்திக் பாண்டியாவின் துணை கேப்டன்ஷிப் பதவியை பிசிசிஐ சமீபத்தில் பறித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -