இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரோடு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். இதன் காரணமாக அவர் இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் தொடர்ந்து விளையாடுவார் என்றும் அடுத்த சில ஆண்டுகளுக்கு ரோஹித் சர்மா தான் கேப்டனாக செயல்படுவார் என்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அறிவித்துவிட்டது. ஆனாலும் ரோகித் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார் என்பது உறுதி செய்யப்படவில்லை.
அதே வேளையில் அடுத்த தலைமுறை அணியை பலப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறது. அந்த வகையில் ஒருநாள் மற்றும் டி20 அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில்லை நியமித்துள்ளது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட ஹார்டிக் பாண்டியா, பும்ரா, ரிஷப் பண்ட் போன்ற சீனியர் வீரர்கள் இருக்கும் வேளையில் அவருக்கு துணைக் கேப்டன் வாய்ப்பு வழங்கப்பட்டது பலரது மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ச்சியாக இடம் பிடித்து விளையாடி வரும் கில் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுவதால் அவரையே கேப்டனாக மாற்ற நினைத்து இந்த நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்து வருகிறது. தற்போது டி20 மற்றும் ஒருநாள் துணைக்கேப்டனாக இருக்கும் சுப்மன் கில்
விரைவில் நடைபெற இருக்கும் பங்களாதேஷ் தொடரின் போது டெஸ்ட் அணிக்கும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணைக்கேப்டனாகவும் இருந்து வரும் வேளையில் ரோகித் சர்மாவிற்கு அடுத்து இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக பும்ரா தான் செயல்படுவார் என்று பலராலும் பேசப்பட்டது.
இதையும் படிங்க : இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ
இவ்வேளையில் பும்ராவின் பதவியை பறித்து சுப்மன் கில்லுக்கு வழங்கி ரோஹித் சர்மா வெளியேறியதும் சுப்மன் கில்லை டெஸ்ட் கேப்டனாக மாற்றப்படவே இந்த துணை கேப்டன் பதவி அவருக்கு வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் நிரந்தர டெஸ்ட் கேப்டன்சி பதவிக்கு காத்திருந்த பும்ராவிற்கு ஏமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



