இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது நாளை ஜூலை 27-ஆம் தேதி பல்லகல்லே நகரில் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே இலங்கை சென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவும், பயிற்சியாளராக கம்பீரும் நியமிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தலைமையில் இந்திய அணி எவ்வாறு செயல்பட போகிறது என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நிலையில் இந்த முதல் போட்டியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்பது குறித்த உத்தேச தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் நாளைய போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் விளையாட அதிக வாய்ப்புள்ளது.
அவர்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தில் கேப்டன் சூர்யகுமார் யாதவும், நான்காவது இடத்திலும் ரிஷப் பண்டும் விளையாட அதிக வாய்ப்புள்ளது. அவர்களுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் ரிங்கு சிங்கும், ஆறாவது இடத்தில் ஆல்ரவுண்டராக ஹார்டிக் பாண்டியா விளையாடுவார் என்று தெரிகிறது. அதனை தவிர்த்து இரண்டு சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்கர் பட்டேல் ஆகியோர் இடம் பெற வாய்ப்புள்ளது.
கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக ரவி பிஷ்னாய் இடம் பெறுவார் என்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. அதன்படி இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : என்னுடைய கேப்டன்சி அவரைமாதிரி தான் இருக்கும்.. அவர்கிட்ட இருந்து நிறைய கத்து இருக்கேன் – சூரியகுமார் யாதவ்
1) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 2) சுப்மன் கில், 3) சூரியகுமார் யாதவ், 4) ரிஷப் பண்ட், 5) ரிங்கு சிங், 6) ஹார்டிக் பாண்டியா, 7) வாஷிங்டன் சுந்தர், 8) அக்சர் படேல், 9) ரவி பிஷ்னாய், 10) அர்ஷ்தீப் சிங், 11) முகமது சிராஜ்.



