நீங்க சொன்னால் கேட்கணுமா? – சௌரவ் கங்குலியின் பேச்சை உதாசீனப்படுத்திய இந்திய வீரர்

Pandya
- Advertisement -

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையின் 2020/21 சீசன் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2021/22 சீசன் பல தடைகளை கடந்து வரும் பிப்ரவரி 10ஆம் தேதி அன்று துவங்க உள்ளது. இம்முறை 2 பாகங்களாக நடைபெற உள்ள இந்த கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் தற்போதும் நாக்அவுட் சுற்று போட்டிகள் ஐபிஎல் 2022 தொடர் முடிந்த பின்னும் நடைபெற உள்ளன.

crick-BCCI

- Advertisement -

இந்த தொடர் மீண்டும் நடைபெறுவதால் இந்தியாவில் இருக்கும் பல ஆயிரம் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளார்கள். அத்துடன் சீனியர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடி வரும் சில முக்கிய வீரர்கள் இந்த கோப்பையில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கங்குலியின் ஆலோசனை:
எப்போதுமே இந்தியாவுக்காக விளையாடும் நட்சத்திர வீரர்கள் தங்களின் பார்மை இழக்கும்போது உடனே ரஞ்சி கோப்பைக்கு திரும்பி சிறப்பாக விளையாடி தங்களின் பார்மை மீட்டெடுத்து மீண்டும் இந்தியாவிற்காக விளையாடி உள்ளார்கள். குறிப்பாக இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன் போன்றவர்கள் பார்ம் இழந்தபோது இந்த ரஞ்சி கோப்பையின் உதவியுடன் இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் வெற்றிகரமாக காலடி வைத்துள்ளார்கள்.

pujara 1

அந்த வகையில் தற்போதைய இந்திய சீனியர் டெஸ்ட் அணியில் ரன்கள் குவிக்க திண்டாடி வரும் அஜிங்கிய ரஹானே, செட்ஸ்வார் புஜாரா ஆகியோர் இழந்த தங்களின் பார்மை மீட்டெடுக்க இந்த ரஞ்சி கோப்பை ஒரு பொன்னான வாய்ப்பு என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஆலோசனை தெரிவித்திருந்தார். அதேபோல் காயத்தால் தடுமாறி வரும் மற்றொரு நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் இந்த தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

கேட்காத பாண்டியா:
சொல்லப்போனால் இந்த ரஞ்சி கோப்பையில் ஹர்திக் பாண்டியா விளையாடி தனது பார்மை மீட்டெடுக்க வேண்டுமென என கடந்த வாரம் சவுரவ் கங்குலி தெரிவித்தது பின்வருமாறு. “ஹர்டிக் தற்போது காயமடைந்துள்ளார். அவருக்கு அதிலிருந்து வெளிவர தேவையான கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அப்போதுதான் அவர் அதிலிருந்து முழுமையாக குணமடைந்து இந்தியாவிற்காக நீண்ட நாட்கள் விளையாட முடியும். அந்த முயற்சியின் முதல்படியாக அவர் ரஞ்சி கோப்பையில் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன். குறிப்பாக அவர் நிறைய ஓவர்களை வீசி தனது உடலைத் தேற்றுவார் என நம்புகிறேன்” என அக்கறையுடன் தெரிவித்திருந்தார்.

Ganguly

ஆனால் அதை உதாசீனப்படுத்தும் வண்ணமாக ரஞ்சி கோப்பையில் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த கோப்பையில் அவர் விளையாடும் மாநில அணியான பரோடா அணியில் அவரின் பெயர் இடம் பெறவில்லை என்பது இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மாறாக அவருக்கு பதில் மற்றொரு வீரர் கேதார் தேவ்தார் பரோடா அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார்.

ஐபிஎல் மட்டும் போதுமா:
ஏனெனில் கடந்த வருடம் காயமடைந்த அவர் அதிலிருந்து குணமடைந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய போதிலும் பந்து வீசாமல் பேட்டிங் மட்டும் செய்து வந்தார். எனவே அவரை நம்பிய இந்திய தேர்வு குழுவினர் கடந்த வருடம் நடந்த டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்தனர். ஆனால் அந்த உலகக் கோப்பையில் முக்கியமான பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒருவர் கூட வீசாத அவர் எஞ்சிய போட்டிகளிலும் முழுமையாக பந்து வீசாததால் இந்தியா படுதோல்வி அடைந்தது.

pandya 3

இதனால் கடுப்பான இந்திய அணி நிர்வாகம் முழுமையாக பந்து வீசும் வரை இந்திய அணியில் இடமில்லை என தற்போது அவரை கழட்டிவிட்டு உள்ளது. அப்படிப்பட்ட வேளையில் ஐபிஎல் 2022 தொடரில் அகமதாபாத் அணியின் கேப்டனாக 15 கோடிகளுக்கு விளையாட ஹர்திக் பாண்டியா ஒப்பந்தமாகியுள்ளார். அந்த தொடருக்கு தயாராக ஒரு அற்புதமான வாய்ப்பாக ரஞ்சி கோப்பை கிடைத்துள்ள போதிலும் அதில் விளையாடாமல் நேரடியாக ஐபிஎல் தொடரில் தான் பங்கேற்பேன் என்பது போல் அவர் முடிவெடுத்துள்ளார். அப்படியானால் ஐபிஎல் தொடர் மட்டும் போதும் என ஹர்திக் பாண்டியா நினைப்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.

Advertisement