IND vs ENG : கடைசி பந்தில் பவுண்டரி அடித்தும் ஹார்டிக் பாண்டியாவிற்கு அவுட் கொடுத்தது ஏன்? – ரூல்ஸ் கூறுவது என்ன?

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியானது நேற்று அடிலெயிடு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவித்தது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்களும், விராட் கோலி 40 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அசத்தினர். பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது 16 ஓவர்களின் முடிவில் விக்கெட் எதுவும் இழக்காமல் 170 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் இந்திய அணி 150 ரன்களையாவது தொடுமா என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதியில் அதிரடி காண்பித்த ஹர்திக் பாண்டியா 33 பந்துகளை சந்தித்த வேளையில் நான்கு பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர் என 63 ரன்கள் எடுத்து அமர்க்களமப்படுத்தினார்.

அதிலும் குறிப்பாக இறுதி கட்ட ஓவரில் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்க விட்ட பாண்டியா ஒரு கட்டத்தில் இந்திய அணியை நல்ல ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றார் என்றே சொல்லலாம். அதேபோன்று இந்த போட்டியின் போது அவர் இறுதிப்பந்தில் ஆட்டம் இழந்த விதம் தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியின் கடைசி பந்தில் ஸ்டம்பிற்கு மிக அருகில் சென்று லெக் சைடில் பந்தை தட்டிவிட்ட ஹர்திக் பாண்டியா அந்த பந்தில் பவுண்டரி அடித்து இருந்தாலும் ஸ்டம்பை தனது காலால் இடித்து அவரது விக்கெட்டை இழந்தார். இந்த ஹிட் விக்கெட் குறித்து ஐசிசி கூறும் ரூல்ஸ் யாதெனில் :

இதையும் படிங்க : எத்தனை ரோஹித் – கோலி வந்தாலும், அவர மாதிரி கேப்டன் இந்தியாவுக்கு எப்போதுமே கிடைக்க மாட்டாங்க – கம்பீர் அதிரடி

பந்து பவுண்டரிக்கோ, சிக்ஸருக்கோ பறந்தால் கூட பேட்ஸ்மேன் ஸ்டம்பை தங்களது உடம்பால் தட்டிவிட்டால் அந்த ரன் கணக்கிடப்படாது என்றும் அவர் விக்கெட் என்றே அறிவிக்கப்படுவார் என்பதனால் ஹார்டிக் பாண்டியா கடைசி பந்தில் பவுண்டரி அடித்தும் அது வீணாய் போய் இறுதியில் அவர் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது. ஹர்திக் பாண்டியா ஹிட் விக்கெட் ஆன இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement