தன்னால் காயமைடைந்த சிறுமிக்கு போட்டி முடிந்ததும் பாண்டியா வழங்கிய அன்புப்பரிசு – நெகிழவைக்கும் தகவல் இதோ

Hardik-Pandya
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியானது கயானா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் குவித்தது. பின்னர் 160 அடித்தால் வெற்றி என்று இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய இந்திய அணியானது 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 164 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 83 ரன்களும், திலக் வர்மா 49 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 20 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

இதன் காரணமாக இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணியானது தற்போது இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இந்த போட்டியின் போது திலக் வர்மாவை அரைசதம் அடிக்க விடாமல் ஹார்டிக் பாண்டியா சிக்ஸர் அடித்து போட்டியை முடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.

இவ்வேளையில் தற்போது ஹார்டிக் பாண்டியா செய்துள்ள மற்றொரு விடயம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது. அந்த வகையில் இந்த போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹர்திக் பாண்டியா அடித்த பந்து பெவிலியனில் இருந்த ஒரு சிறுமியை தாக்கியுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக உடனடியாக பிசிசிஐ-யின் மருத்துவக்குழு அவருக்கு முதல் உதவி வழங்கியுள்ளனர். அப்போது அந்த சிறுமையை நேரில் சந்தித்த ஹார்டிக் பாண்டியா போட்டி முடியும் வரை காத்திருங்கள் என்று கூறிவிட்டு சென்றிருந்தார்.

இதையும் படிங்க : இது ஐபிஎல் இல்ல கண்ணா, டி20 கிரிக்கெட்டில் 50% மேல் டாட் பந்துகளை திண்ணா எப்டி – இளம் வீரர் மீது ஆகாஷ் சோப்ரா அதிருப்தி

அதன்பின்னர் போட்டி முடிந்த கையோடு நேரடியாக அந்த சிறுமையை சந்தித்த ஹார்டிக் பாண்டியா மேட்ச்சில் பயன்படுத்தப்பட்ட பந்தினை வாங்கி அதில் தனது கையொப்பத்தினை இட்டு அந்தப் பந்தை அவருக்கு அன்புப்பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்த வீடியோவும் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement