இந்த அவார்டு எனக்கு வேணாம்.. எனக்கு ஹெல்ப் பண்ண அவருக்கு குடுங்க – பெரிய மனதை காட்டிய பாண்டியா

Hardik Pandya
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 12-வது லீக் போட்டியானது நேற்று அபுதாபி நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஓமன் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடியிருந்த வேளையில் இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 21 ரன்கள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி அசத்தியிருந்தது.

தனக்கு கிடைத்த விருதை உதவியாளருக்கு வழங்கிய ஹார்டிக் பாண்டியா :

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்து அசத்தியது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் 56 ரன்களையும், அபிஷேக் சர்மா 38 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர்.

- Advertisement -

பின்னர் 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஓமன் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே குவித்ததால் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.

இந்த போட்டியின் போது ஓமன் அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் துவக்க வீரர் ஆமிர் கலீம் 64 ரன்களையும், ஹம்மத் மிஸ்ரா 51 ரன்களையும் குவித்திருந்தனர். இந்நிலையில் இந்த போட்டியின் போது பீல்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்த நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா ஓமன் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஆமீர் கலீமின் கேட்சை பவுண்டரி லைனில் மிகக் கட்சிதமாக பிடித்து இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக மாறியிருந்தார்.

- Advertisement -

இதனால் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்திய அவருக்கு ஓமன் அணிக்கு எதிரான போட்டிக்கான “இம்பேக்ட் பிளேயர்” விருது வழங்கப்பட்டது. அதற்காக அவருக்கு ஒரு மெடலும் ஓய்வறையில் அவரது கழுத்தில் அணிவிக்கப்பட்டது. அந்த பதக்கத்தினை பெற்ற ஹார்டிக் பாண்டியா உடனடியாக ஒரு நிர்வாக உதவியாளருக்கு வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க : தந்தையின் இறுதிச்சடங்கை செய்து முடித்த கையோடு இலங்கை வீரர் செய்த செயல் – நெகிழவைக்கும் சம்பவம்

ஏனெனில் பீல்டிங் பயிற்சியின் போது அவர்தான் ஹார்டிக் பாண்டியாவிற்கு நிறைய உதவியுள்ளார் என்பதனால் அந்த உதவி பயிற்சியாளரான தயானந்த் கரனிடம் அவர் அந்த மெடலை வழங்கியுள்ளார். ஹார்டிக் பாண்டியாவின் இந்த பெருந்தன்மையான செயல் ரசிகர்களையும் நெகிழ வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement