இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய 8 நாடுகள் பங்கேற்று விளையாடி வரும் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி துவங்கியது. செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரின் இறுதிவரை சென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இலங்கை வீரர் துனித் வெல்லாலகே செய்த நெகிழ்ச்சியான செயல் :
இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளானது முற்றிலுமாக நடைபெற்று முடிந்து விட்டது. அதற்கடுத்து இன்று செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் சூப்பர் போர் சுற்று போட்டிகள் துவங்க இருக்கிறது. இந்த சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியானது இன்று துபாய் மைதானத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெறயிருக்கிறது.
செப்டம்பர் 26-ஆம் தேதி வரை சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெறும். அதன்பின்னர் சூப்பர் ஃபோர் சுற்றின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் துபாய் மைதானத்தில் விளையாட இருக்கின்றன. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடரின் 11-வது லீக் ஆட்டமானது அபுதாபி மைதானத்தில் செப்டம்பர் 18-ஆம் தேதி நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது.
அந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதின. அந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றிருருந்தது. நேற்று முன்தினம் நடைபெற்ற அந்தப் போட்டியின் போது இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான துனித் வெல்லாலகேவும் பங்கேற்று விளையாடி இருந்தார்.
ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே துனித் வெல்லாலகேவின் தந்தை சுரங்கா வெல்லாலகே இலங்கையில் மாரடைப்பால் மரணம் அடைந்தது குறித்த தகவல் அவரது அணியினருக்கு வந்தது. பின்னர் ஆட்டம் முடிந்ததும் அவரது தந்தை இறந்த செய்தியை அவரிடம் நிர்வாகிகள் தெரிவிக்க மைதானத்திலேயே வருத்தம் தளாமல் கதறி அழுதார்.
பின்னர் அந்த போட்டி முடிந்து உடனடியாக நாடு திரும்பிய துனித் வெல்லாலகே தனது தந்தையின் இறுதிச் சடங்கினை முடித்துவிட்டு நேரடியாக இன்று காலை இலங்கையில் இருந்து கிளம்பி துபாய் வந்து இலங்கை அணியுடன் இணைந்துள்ளார். ஏனெனில் இன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான சூப்பர் போர் சுற்றின் முதல் போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இதையும் படிங்க : டாசின் போதே மாறி மாறி சிரித்த சூரியகுமார் மற்றும் ஜிதேந்தர் சிங்.. கலகலப்பான மைதானம் – என்ன நடந்தது?
இந்த போட்டியில் விளையாட வேண்டும் என்பதற்காகவே அவர் இறுதி சடங்கு முடிந்த கையோடு அங்கிருந்து புறப்பட்டு துபாய் வந்துள்ளார். இப்படி தேசத்திற்காக விளையாட வேண்டும் என்று அவர் அர்ப்பணிப்புடன் செய்த இந்த செயல் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



