நேற்று செப்டம்பர் 19-ஆம் தேதி அபுதாபி மைதானத்தில் இந்தியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று போட்டிகளின் கடைசி லீக் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 அவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது.
டாஸின் போது ஏற்பட்ட சுவாரசியம் : விவரம் இதோ
பின்னர் அடுத்தாக 189 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஓமன் அணியானது 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணியானது 21 ரன்கள் வித்யாசத்தில் அசத்தலான வெற்றியும் பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக டாஸ் போடும்போது இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் ஓமன் அணியின் கேப்டன் ஜிதேந்தர் சிங் ஆகிய இருவருமே செய்த ஒரு சம்பவம் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அதுகுறித்த விவரம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வகையில் நேற்றைய போட்டியின் போது டாஸ் போட்ட பின்னர் இந்திய அணியில் உள்ள மாற்றங்கள் குறித்து பேசிய கேப்டன் சூர்யா குமார் யாதவ் : இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் ஒன்று ஹர்ஷித் ராணா அணிக்குள் வருகிறார் என்று கூறிவிட்டு மற்றொரு வீரர் யார்? என்பதை மறந்துவிட்டார்.
சிறிது நேரம் யோசித்த சூரியகுமார் சிரித்திய படியே “அட கடவுளே நானும் வரவர ரோகித் போல ஆகிவிட்டேன்” என்று தான் மாற்றத்தை மறந்து விட்டதாக சிரித்துக்கொண்டே நகர்ந்தார். அதன் பின்னர் ஓமன் அணியின் கேப்டன் ஜிதேந்தர் சிங்கிடம் உங்கள் அணியில் மாற்றங்கள் என்ன? என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதையும் படிங்க : தோனி தான் என்னோட இன்ஸ்பிரேஷன்.. அவரை ஒரு நாள் மீட் பண்ணனும் – விருப்பத்தை வெளிப்படுத்திய ஓமன் வீரர்
அதற்கு பதிலளித்த அவரும் எங்களது அணியில் இரண்டு மாற்றங்கள் இருக்கின்றன என சொல்லி ஒருவரின் பெயரை கூறிவிட்டு மற்றொரு வீரரின் பெயரை மறந்துவிட்டார். இப்படி டாசின் போது இரு அணியின் கேப்டன்களுமே தங்களது அணியில் உள்ள மாற்றங்களை மறந்த சம்பவம் இணையத்தில் வீடியோவாகவும் வரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.



