ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த ஆண்டு நடைபெற்ற 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து வெளியேறியதை அடுத்து அந்த அணியின் மீது பெரியளவு விமர்சனம் இருந்த வேளையில் இந்த நடப்பு 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரையும் மிக மோசமாக துவங்கியுள்ளது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
முதல் இந்திய வீரராக ஹார்டிக் பாண்டியா நிகழ்த்திய சாதனை :
அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் ஒரு வெற்றி மற்றும் மூன்று தோல்விகளுடன் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியானது ஏப்ரல் 7-ம் தேதி நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் அவர்களது சொந்த மைதானத்தில் விளையாடியது.
இந்த போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்து மோசமான நிலையை சந்தித்துள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 221 ரன்களை குவிக்க பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 209 ரன்களை மட்டுமே குவித்ததால் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
இப்படி தொடர்ச்சியான மும்பை அணியின் தோல்விகள் அந்த அணியின் நிர்வாகத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்து வருகிறது. ஆனாலும் இந்த போட்டியின் போது தனிப்பட்ட வீரராக மிகச் சிறப்பாக செயல்பட்ட ஹார்திக் பாண்டியா பந்துவீச்சின் போது 4 ஓவர்கள் வீசி 45 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
அதோடு பேட்டிங்கிலும் 15 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 42 ரன்கள் எடுத்து அதிரடி காட்டி இருந்தார். இந்நிலையில் நேற்று அவர் எடுத்த 2 விக்கெட் மூலம் டி20 கிரிக்கெட்டில் முதல் இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் : டி20 கிரிக்கெட்டில் 5000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தி உள்ளார்.
இதையும் படிங்க : சிஎஸ்கே மாதிரி மும்பையையும் மண்ணை கவ்வ வைப்போம்.. விராட் கோலி விட்ட சவாலில் சாதித்த ஆர்சிபி
இவருக்கு முன்பாக டி20 கிரிக்கெட் 5000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் டுவைன் பிராவோ, ஷாகிப் அல் ஹசன், ஆண்ட்ரே ரசல், முகமது நபி, சமித் பட்டேல், கைரன் பொல்லார்டு, ரவி போபாரா, டேனியல் கிறிஸ்டியன், மொயின் அலி, ஷேன் வாட்சன், முகமது ஹபீஸ் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.



