டூபிளெஸ்ஸிஸ், சாம்சனை தொடர்ந்து குஜராத் கேப்டன் பாண்டியாவிற்கும் அபராதம் விதித்த – ஐ.பி.எல் நிர்வாகம்

Saha
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த ஆண்டிற்கான விதிமுறைகள் சற்று கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வருவதால் அனைத்து அணிகளை சேர்ந்த கேப்டன்களுக்கும் தொடர்ச்சியாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் மற்றும் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் அபராதம் விதித்திருந்தது.

IPL-2023

- Advertisement -

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு கேப்டன் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவிற்கும் 12 லட்ச ரூபாய் அபராதம் விதித்து ஐபிஎல் கிரிக்கெட் நிர்வாகம் அதிரடி காட்டியுள்ளது.

அந்த வகையில் நேற்று நடைபெற்ற 18-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், ஷிகார் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஜராத் அணியானது ஆறு விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி தங்களது வெற்றி நடையை தொடர்கிறது.

Shami

அதன்படி நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டை இழந்து 153 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய குஜராத் அணி 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய வேளையில் 19.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் அடித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் ஐபிஎல் விதிமுறைப்படி உரிய நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை என்கிற காரணத்தினால் ஹார்டிக் பாண்டியாவின் சம்பளத்தில் இருந்து 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : வார்னர் மட்டும் அந்த விஷயத்தை சேன்ஞ் பண்ணலனா நான் பதவியே வேணான்னு கிளம்பிடுவேன் – வாட்சன் கொதிப்பு

பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் முதலாவதாக பந்துவீசிய குஜராத் அணி குறிப்பிட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் கடைசி ஓவரில் ஒரு பீல்டரை உள்வட்டத்திற்குள் நிறுத்தியது. அதுமட்டுமின்றி போட்டி முடிந்த கையோடு அவருக்கு இந்த 12 லட்சரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement