- Advertisement -
ஆசிய கோப்பை

பச்சை சட்டை பாத்தாலே விக்கெட் எடுப்பாரு போல.. ஹார்டிக் பாண்டியா நிகழ்த்திய – அசத்தல் சாதனை

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தனது அட்டகாசமான செயல்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். கடந்த பல ஆண்டுகளாகவே டி20 போட்டிகளில் மேட்ச் வின்னராக இந்திய அணியில் பயணித்து வரும் அவர் பேட்டிங்கில் பின் வரிசையில் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பினிஷிங் செய்து கொடுத்து வருகிறார்.

பாக் அணிக்கு எதிராக ஹார்டிக் பாண்டியா அசத்தல் :

அதோடு மட்டுமின்றி பந்துவீச்சிலும் துவக்க ஓவர்கள், இறுதிகட்ட ஓவர்கள் என முக்கியமான நேரங்களில் பந்துவீசி தனது பங்களிப்பை வழங்கி அசத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார்.

- Advertisement -

அந்தவகையில் நேற்றைய பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் 3 ஓவர்கள் வீசிய ஹார்டிக் பாண்டியா 29 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான பகார் சமானை 15 ரன்களில் முதல் விக்கெட்டாக பாண்டியா தான் ஆட்டமிழக்க செய்திருந்தார்.

அப்படி பகார் ஜமானின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தனது ஒரு தனித்துவமான சாதனையை அவர் மேலும் தொடர்ந்துள்ளார். இந்த ஆசிய கோப்பை தொடரில் பேட்டிங்கில் பெரியளவில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பந்துவீச்சின் போது பாண்டியா மிகச்சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய பவுலராக ஹார்டிக் பாண்டியாவே இருந்து வருகிறார். ஹார்திக் பாண்டியா இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக மட்டும் 8 டி20 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இதையும் படிங்க : ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக முதல் சர்வதேச வீரராக அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை – இதுதான் தரமான அடி

அதிலும் குறிப்பாக 8 டி20 போட்டிகளில் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியுள்ள அவர் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளதோடு மட்டுமின்றி பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் அவர் விளையாடிய போது எந்த ஒரு போட்டியிலுமே விக்கெட் எடுக்காமல் சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -