திலக் வர்மாவை ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேற்றியது ஏன்? போட்டிக்கு பின் ஹார்டிக் பாண்டியா – அளித்த விளக்கம்

Tilak Varma
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்று நடைபெற்ற நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 16-ஆவது லீக் போட்டியில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது இறுதி கட்டத்தில் தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 12 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி அசத்தியது. அதிலும் குறிப்பாக 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய மும்பை அணிக்கு கடைசி இரண்டு ஓவருக்கு 29 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

திலக் வர்மாவை வெளியேற்றியது ஏன்? பாண்டியா கொடுத்த விளக்கம்

அப்போது திலக் வர்மா 19-வது ஓவரின் இறுதிப்பந்துக்கு முன்னதாக களத்திலிருந்து ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேற்றப்பட்டது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் மும்பை அணியின் நட்சத்திர இளம் வீரராக பார்க்கப்படும் திலக் வர்மா பல போட்டிகளில் தனிநபராக இருந்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இவ்வேளையில் நேற்று இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அவர் 23 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் மட்டுமே குவித்தார்.

- Advertisement -

குறிப்பாக கடைசி நேரத்தில் அவரால் பவுண்டரிகளை அடிக்க முடியவில்லை என்கிற காரணத்தினால் 19-வது ஓவரின் போது கேப்டன் ஹார்டிக் பாண்டியா அவரை ரிட்டயர்டு அவுட் முறையில் களத்தில் இருந்து வெளியேற்றினார். ஐபிஎல் விதிமுறைப்படி 25.4.2 என்கிற ரூல்ஸ் அடிப்படையில் ஒரு வீரரும் எந்த ஒரு காரணத்திற்காகவும் களத்திலிருந்து எந்த நேரத்திலும் வெளியேறலாம் என்பதனால் அந்த விதிமுறையின் அடிப்படையில் ஹார்டிக் பாண்டியாவின் வேண்டுகோளுக்கு இணங்க 19-வது ஓவரின் கடைசி பந்தில் திலக் வர்மா ரிட்டயர்டு அவுட் முறையில் களத்தில் இருந்து வெளியேறினார்.

19-வது ஓவரை வீசிய ஷர்துல் தாகூர் முதல் 5 பந்துகளிலும் சிங்கிள் மட்டுமே கொடுக்க கடைசி பந்தில் திலக் வரர்மா வெளியேறினார். அவருக்கு பதிலாக உள்ளே வந்த மிட்சல் சான்ட்னர் கடைசி பந்தில் இரண்டு ரன்களை மட்டுமே அடித்தார். இறுதியில் கடைசி ஓவரின் போது மும்பை அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவை என்கிற நிலையில் அந்த கடைசி ஓவரில் மும்பை அணி 9 ரன்களை மட்டுமே குவித்ததால் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து திலக் வர்மாவை ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேற்றுவதற்கு என்ன காரணம்? என்பது குறித்து விளக்கம் அளித்த மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் : இறுதி நேரத்தில் எங்களுக்கு சில பௌண்டரிகள் தேவைப்பட்டது. ஆனால் கிரிக்கெட்டில் இதுபோன்ற சூழ்நிலை எப்போதாவது நடப்பது இயல்புதான்.

இதையும் படிங்க : இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே.. தோனி போல செய்து சொதப்பிய பாண்டியா.. அம்பானி வேதனை

அந்த வகையில் திலக் வர்மா எவ்வளவோ முயற்சித்தும் அவரால் கடைசி நேரத்தில் பௌண்டரிகளை அடிக்க முடியவில்லை. சிறப்பான வீரருக்கு இது போன்ற ஒரு மோசமான நாள் அமையும். அந்த வகையில் திலக் வர்மாவிற்கு இந்த போட்டியில் பெரிய டச் இல்லாததாலேயே அவரை வெளியேற்றினேன் என பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement