இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஆல்ரவுண்டர் – இப்போதான் கரெக்ட்டான முடிவு எடுத்திருக்காங்க

Pandya-1
- Advertisement -

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது சூப்பர் 12-சுற்றோடு வெளியேறியுள்ளதால் அடுத்ததாக நடைபெறவுள்ள இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, பும்ரா, முகமது ஷமி, ஜடேஜா போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

indvsnz

- Advertisement -

அதே வேளையில் கடந்த சில ஆண்டுகளாகவே காயம் காரணமாக பந்துவீசாமல் அணியில் இருந்து வரும் ஹார்டிக் பாண்டியா அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பந்து வீசாமல் இருந்து வரும் அவர் டி20 உலக கோப்பை தொடரில் பந்து வீசுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டு அணியில் ஒரு ஆல்ரவுண்டராக சேர்க்கப்பட்டு இருந்தார்.

ஆனால் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா உலகக் கோப்பை தொடரிலும் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வந்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் 2 ஓவர்கள் மட்டுமே அவர் பந்து வீசியதால் அவரை இனியும் அணியில் வைத்திருக்கக் கூடாது என்று இந்திய அணி அதிரடியாக அவரை அணியில் இருந்து நீக்கியுள்ளது.

pandya

அவருக்கு பதிலாக நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயரை ஆல்-ரவுண்டராக அணியில் இணைத்துள்ளது. வெங்கடேஷ் ஐயர் பேட்டிங்கில் அதிரடி காட்டுவது மட்டுமின்றி பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – புதிய கேப்டன் நியமனம்

இதன் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் வெங்கடேஷ் ஐயருக்கு முதன்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நியூசிலாந்து தொடரில் ஒரு வேளை வெங்கடேஷ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் தொடர்ந்து அவர் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக நீடிக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement