நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – புதிய கேப்டன் நியமனம்

IND
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 12-சுற்றோடு இந்திய அணி வெளியேறியுள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் நவம்பர் 17-ஆம் தேதி இந்தியாவில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது. ஏற்கனவே விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் புதிய கேப்டன் தலைமையில் இந்திய அணி இந்த டி20 தொடரில் விளையாடும் என்று அறிவிக்கப்பட்டது.

INDvsNZ

- Advertisement -

அதன்படி தற்போது 17 ஆம் தேதி தொடங்க உள்ள டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த புதிய இந்திய அணியில் உலக கோப்பையில் விளையாடிய சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மா தலைமையில் 16 வீரர்கள் இந்த தொடரில் இடம்பெற்றுள்ளனர். நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியின் வீரர்களின் பட்டியல் இதோ :

rohith

1) ரோகித் ஷர்மா (கேப்டன்), 2) கே.எல். ராகுல் (துணை கேப்டன்), 3) ருதுராஜ் கெய்க்வாட், 4) ஷ்ரேயஸ் ஐயர், 5) சூர்யகுமார் யாதவ், 6) ரிஷப் பண்ட் (விக்கே கீப்பர்), 7) இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), 8) வெங்கடேஷ் ஐயர், 9) சாஹல், 10) அஷ்வின், 11) அக்சர் படேல், 12) ஆவேஷ் கான், 13) புவனேஷ்வர் குமார், 14) தீபக் சாஹர், 15) ஹர்ஷல் பட்டேல், 15) முகமது சிராஜ்.

- Advertisement -

இதையும் படிங்க : நானும் தோனியும் இல்லனா விராட் கோலி டீம்லயே இருந்திருக்க மாட்டார் – சேவாக் பகிர்ந்த சுவாரசியம்

உலககோப்பை தொடரில் சொதப்பலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியால் தற்போது இந்திய அணி இளம்வீரர்களை கொண்டு இந்த தொடரில் சோதனை முயற்சியினை நடத்துகிறது. இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அணியில் நீடித்து அடுத்த உலகக்கோப்பைக்காக தயார்படுத்த படுவார்கள் என்று தெரிகிறது.

Advertisement