நானும் தோனியும் இல்லனா விராட் கோலி டீம்லயே இருந்திருக்க மாட்டார் – சேவாக் பகிர்ந்த சுவாரசியம்

Sehwag
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 254 ஒருநாள் போட்டிகள், 96 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 95 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். நேற்று நமீபியா அணிக்கு எதிரான போட்டியுடன் தனது டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகிய அவர் ஆரம்ப காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான பார்ம் இன்றி தவித்தார். 2011-ஆம் ஆண்டு தனது டெஸ்ட் கெரியரை துவங்கிய விராட் கோலி இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்களுடன் 7765 ரன்களை குவித்துள்ளார்.

kohli century

- Advertisement -

இந்நிலையில் நானும் தோனியும் விராட் கோலிக்கு ஆதரவளிக்கவில்லை என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி எப்போதோ நீக்கப்பட்டு இருப்பார் என சுவாரஸ்யமான தகவல் ஒன்றை இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான போது டவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் வெறும் 76 ரன்கள் மட்டுமே குவித்தார்.

அதன்பிறகு ஆஸ்திரேலிய தொடரின் போதும் மிகவும் தடுமாறினார். இதன் காரணமாக அந்த தொடரின் 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பு கோலியை அணியில் எடுக்கலாமா ? வேண்டாமா ? என்ற குழப்பத்தில் இந்திய அணி நிர்வாகம் இருந்தது. மேலும் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மாவை அணியில் களமிறக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது .

sehwag 1

ஆனால் அப்போது கேப்டனாக இருந்த தோனியும், துணை கேப்டனாக இருந்த நானும் கோலியை நீக்கக்கூடாது என்று ஆதரவளித்தோம். அதன் பிறகு கோலி இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது வரலாற்றை படைத்தார் என்பது நாம் அறிந்ததே. 2012ஆம் ஆண்டு பெர்த் டெஸ்ட்க்கு முன்பாக அவர் அணியில் இருந்து நீக்கப்படுவார் என்று இருந்த வேளையில் நானும் தோனியும் அவருக்கு ஆதரவு அளித்தோம்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்த ஒரு விஷயத்தை நான் மாத்திக்க மாட்டேன். அப்படி நடந்தா நான் விளையாடமாட்டேன் – கோலி அதிரடி

அதன்பிறகு விராட் கோலி அந்த தொடரில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் அது மட்டுமின்றி அதற்கு அடுத்த சில ஆண்டுகளிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக மாறி விராட் கோலி மாறினார். தோனிக்கு பிறகு கேப்டனாகவும் பதவியேற்ற அவர் கேப்டனாகவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டார் என்ற சுவாரசிய தகவலை சேவாக் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement