ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் நான்காம் தேதி நடைபெற்ற 16வது போட்டியில் மும்பை அணியை லக்னோ 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. லக்னோவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் 204 ரன்களை துரத்திய மும்பை 20 ஓவரில் 191/5 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 67, நமன் திர் 46, கேப்டன் பாண்டியா 28*, திலக் வர்மா 26 ரன்கள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.
முன்னதாக அந்தப் போட்டியில் மெதுவாக விளையாடிய திலக் வர்மா ரிட்டையர்ட் அவுட் முறையில் வெளியே சென்றது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதே போல ஹர்திக் பாண்டியாவின் ஆட்டமும் கேள்வியை எழுப்பியுள்ளது. அதாவது அப்போட்டியில் திலக் வர்மா மெதுவாக விளையாடியதால் ரிட்டையர் அவுட்டாகி சென்றார்.
தோனி போல பாண்டியா:
அவருக்கு பதிலாக மிட்சேல் சான்ட்னர் பேட்டிங் செய்ய களமிறக்கப்பட்டார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரின் முதல் 2, பந்தில் பாண்டியா 4, 2 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் அதற்கடுத்த 2 பந்துக்களை அடித்த பாண்டியா தோனி போல ஃபினிஷிங் செய்ய நினைத்து மிட்சேல் சான்ட்னருக்கு ஸ்ட்ரைக் கொடுக்கவில்லை. குறிப்பாக தம்மை விட சான்ட்னர் பெரிய பேட்ஸ்மேன் கிடையாது என்று கருதிய பாண்டியா அவருக்கு ஸ்ட்ரைக் வழங்கவில்லை.
இறுதியில் 5வது பந்தில் சிக்சர் அடிக்க தவறிய அவர் சிங்கிள் எடுத்து கடைசிப் பந்தில் சான்ட்னருக்கு ஸ்ட்ரைக்கை வழங்கினார். ஒருவேளை 3வது பந்திலேயே அவருக்கு பாண்டியா ஸ்டிரைக்கை கொடுத்திருந்தால் மும்பை வெற்றி பெற்றிருக்கலாம். ஏனெனில் ஒருமுறை சான்ட்னர் சிஎஸ்கே அணிக்காக ராஜஸ்தானுக்கு எதிராக கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றியை பெற்றுக்கொடுத்த திறமைக் கொண்டவர்.
கார்த்திக் விமர்சனம்:
இந்நிலையில் இது போன்ற சூழ்நிலையில் எதிரே இருக்கும் பேட்ஸ்மேனுக்கு ஸ்ட்ரைக்கை கொடுக்காமல் விளையாடும் டிரெண்டை தோனி தான் உருவாக்கியதாக முன்னாள் முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார். அதைப் பார்த்து தற்போது பாண்டியா உள்ளிட்ட பல வீரர்களும் கெட்டுப் போய்விட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மும்பை என்ன செய்ய முயற்சிக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை”
இதையும் படிங்க: 43 ரன்ஸ்.. நியூஸிலாந்து சி அணியிடம் பாகிஸ்தான் 3 – 0 ஒய்ட்வாஷ் படுதோல்வி.. நியூஸி வீரர் வரலாற்று சாதனை
“திலக் வர்மாவால் நன்றாக அடிக்க முடியவில்லை என்ற கருதிய நீங்கள் சான்ட்னரை கொண்டு வந்தீர்கள். முதல் பந்திலேயே 2 ரன் எடுத்த அவரால் பெரியளவில் அடிக்க முடியும் என்று நம்பியதாலயே நீங்கள் திலக்கிற்கு பதிலாக களத்திற்கு கொண்டு வந்தீர்கள். அப்படி இருந்தும் அவருக்கு ஏன் கடைசி ஓவரில் ஸ்ட்ரைக்கை கொடுக்கவில்லை? பாண்டியா தவற விட்ட பந்துகளில் சான்ட்னர் சிக்ஸர்கள் அடித்திருக்கக்கூடும் என்பதை யார் அறிவார். இந்த ட்ரெண்ட்டை எம்எஸ் தோனி துவக்கினார். தற்போது பலரும் அதைச் செய்கின்றனர்” என்று கூறினார்.



