ஹர்டிக் பாண்டியா த்ரோ அடிச்சி உடைச்ச இந்த ஒரு ஸ்டம்போட விலை என்ன தெரியுமா? – பெரிய லாஸ் தான்

Pandya
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது ஹர்டிக் பாண்டியாவின் சிறப்பான ஆட்டம் காரணமாக 4 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்தது. பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே அடித்தது.

Hardik Pandya GT Vs RR 2.jpeg

- Advertisement -

இதன் காரணமாக 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் அடைந்த வெற்றியுடன் சேர்த்து குஜராத் அணி 5 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின்போது எதிர் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் 8வது ஓவரின்போது குஜராத் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனை ரன் அவுட் செய்து அசத்தினார்.

மிகச் சிறப்பாக த்ரோ செய்யப்பட்ட அந்த பந்து ஸ்டம்பில் பட்டு ஸ்டம்பை இரண்டாக உடைத்தது. இதன் காரணமாக போட்டி சில நிமிடங்கள் தாமதமானது. அதுமட்டுமின்றி அம்பயர்களும் களத்தில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அப்படி அவர்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டதற்கு காரணம் என்ன ? அந்த இடைவெளி எதற்காக எடுக்கப்பட்டது ? என்பது குறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

pandya 1

அதன்படி ஹார்டிக் பாண்டியா உடைத்த அந்த ஸ்டம்பின் விலை 40 லட்ச ரூபாய் என்று தெரியவந்துள்ளது. ஏனெனில் மிடில் ஸ்டம்பில் பொருத்தப்படும் கேமரா மிக விலை உயர்ந்தது அதோடு துல்லியமாகக் வீடியோவினை படம் பிடிப்பது, ஆடியோ வினை துல்லியமாக மைக்கில் பதிவு செய்வது என அந்த ஸ்டம்பின் வேலை மிகவும் அதிகம்.

- Advertisement -

இதன்காரணமாக ஆஸ்திரேலியாவில் தயார் செய்யப்படும் அந்த ஸ்டம்ப்களை ஐபிஎல் போட்டிகளில் பிசிசிஐ பயன்படுத்தி வருகிறது. ஒரு டி20 போட்டி நடத்த பிசிசிஐக்கு 33 லட்ச ரூபாய் செலவாகும் வேளையில் இந்த ஒரே ஒரு ஸ்டம்பை உடைத்து பிசிசிஐக்கு 40 லட்சம் ரூபாய் செலவு வைத்துள்ளார் பாண்டியா என்பது கூடுதல் சிறப்பம்சம்.

இதையும் படிங்க : விவேகத்துடன் கூடிய மிரட்டல் வேகம், மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த குரு – பாராட்டுகளை அள்ளும் இளம் இந்திய வீரர்

இந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து தற்காலிகமாக விலகியிருந்த பாண்டியா இத்தொடரில் எவ்வாறு செயல்படப் போகிறாரோ அதை வைத்துதான் இந்திய அணியில் மீண்டும் இடம் என்று அனைவரும் பேசி வந்த வேளையில் தற்போது பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று வகையிலும் அசத்தலான ஆட்டத்தை தொடர்ச்சியாக பாண்டியா வெளிப்படுத்தி வருவதால் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு நிச்சயம் அவர் இந்திய அணிக்கு திரும்புவது தற்போது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement