
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 56-வது லீக் போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் தங்களது ஐந்தாவது தோல்வியை பெற்று புள்ளி பட்டியலில் நான்காம் இடத்திற்கு சரிந்துள்ளது. அதேவேளையில் மும்பை அணியை வீழ்த்திய குஜராத் அணி 8 ஆவது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 155 ரன்கள் குவிக்க பின்னர் 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடுகையில் மழை காரணமாக போட்டி தடைபட்டது. பின்னர் 19 ஓவர்களில் 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதனை துரத்திய குஜராத் அணி சரியாக 19 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களை குவித்ததால் அந்த அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியையும் பதிவு செய்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது மும்பை அணி சார்பாக விளையாடிய அந்த அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா 1 ஓவர் மட்டுமே பந்து வீசி 18 ரன்கள் விட்டுக் கொடுத்து அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார்.
அவரது அந்த ஓவர்தான் இந்த போட்டியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த ஒரு ஓவரை வீசியதன் மூலமாக ஐந்தாவது வீரராக ஐபிஎல் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். அந்த மோசமான சாதனை யாதெனில் : இந்த போட்டியின் போது எட்டாவது ஓவரை வீசிய ஹார்டிக் பாண்டியா மூன்று ஒயிடு, இரண்டு நோபால் என அந்த ஓவரில் 11 பந்துகளை வீசி 18 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் ஒரு ஓவரை வீச அதிக பந்துகளை எடுத்துக் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியலில் தற்போது ஹார்டிக் பாண்டியாவும் இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய வீரர்களான முகமது சிராஜ் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் 2023 ஆம் ஆண்டு தாங்கள் வீசிய ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசியிருந்தனர்.
இதையும் படிங்க : மழைக்கு அப்புறம் விளையாட ரொம்பவே கஷ்டமா இருந்துச்சி.. மும்பையை வீழ்த்த இதுவே காரணம் – சுப்மன் கில் பேட்டி
அதேபோன்று இந்த ஆண்டு ஷர்துல் தாகூர், சந்தீப் ஷர்மா ஆகியோர் 11 பந்துகளை வீசியிருந்த வேளையில் ஹார்டிக் பாண்டியாவும் இந்த போட்டியில் ஒரு ஓவரை வீச 11 பந்துகளை எடுத்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரை வீச அதிக பந்துகளை எடுத்துக் கொண்ட ஐந்தாவது இந்திய வீரர் என்று மோசமான சாதனையை ஹார்டிக் பாண்டியா நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.