- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2002 ரன்ஸ் 101 விக்கெட்ஸ்.. புதிய உலக சாதனை படைத்த பாண்டியா.. யுவ்ராஜை முந்தி வரலாற்று சாதனை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற 5வது டி20 போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நேற்று நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 232 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 73, ஹர்டிக் பாண்டியா 63 ரன்களை எடுத்தார்கள். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா முடிந்தளவு போராடியும் 20 ஓவரில் 201/8 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 65 ரன்களை எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை 3 – 1 என்ற கணக்கில் வென்ற இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. அத்துடன் டெஸ்ட் தொடரில் படுதோல்வியை பரிசளித்த தென்னாப்பிரிக்காவுக்கு ஒருநாள் தொடருடன் சேர்த்து டி20 தொடரையும் வென்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

யுவ்ராஜை முந்திய பாண்டியா:

இந்த வெற்றிக்கு 63 ரன்கள், 1 விக்கெட் எடுத்து முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருது வென்றார். குறிப்பாக 16 பந்துகளில் 50 ரன்கள் அடித்த அவர் இந்தியாவுக்காக 2வது வேகமான அரை சதத்தை அடித்த வீரர் என்ற அபிஷேக் சர்மா (17 பந்துகள்) சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார்.

அதை விட இப்போட்டியையும் சேர்த்து தனது கேரியரில் ஹர்திக் பாண்டியா 4வது முறையாக குறைந்தது 50 ரன்கள் மற்றும் 1 விக்கெட் எடுத்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 50+ ரன்கள் மாற்றும் 1+ விக்கெட் எடுத்த இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையைப் பாண்டியா படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. ஹர்டிக் பாண்டியா: 4*
2. யுவ்ராஜ் சிங்: 3
3. விராட் கோலி/சிவம் துபே: தலா 2

- Advertisement -

புதிய உலக சாதனை:

அவை அனைத்தையும் விட இந்தியாவுக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா இதுவரை பேட்டிங்கில் 97 இன்னிங்ஸில் 2002* ரன்களை குவித்துள்ளார். அதே போல பந்து வீச்சில் 112 இன்னிங்ஸில் 101* விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000+ ரன்கள் மற்றும் 100+ விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனையை ஹர்டிக் பாண்டியா படைத்துள்ளார்.

இதையும் படிங்க: எனக்கே தெரியல.. யுவ்ராஜ் மேல இருப்பது ஹேப்பி.. 16 பந்தில் 50 அடிக்க இதான் காரணம்.. பாண்டியா பேட்டி

இதற்கு முன் ட்வயன் ப்ராவோ, யுவ்ராஜ், ஷாகிப் அல் ஹசன் உட்பட உலகின் எந்த வீரரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000+ ரன்கள் 100+ விக்கெட்டுகள் எடுத்ததில்லை. ஆனால் அப்படிப்பட்ட சாதனை படைத்துள்ள பாண்டியா தன்னை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறந்த ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்துள்ளார். 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன் அவர் நல்ல ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -