எனக்கே தெரியல.. யுவ்ராஜ் மேல இருப்பது ஹேப்பி.. 16 பந்தில் 50 அடிக்க இதான் காரணம்.. பாண்டியா பேட்டி

Hardik Pandya 26
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரை 3 – 1 (5) என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக கடைசிப் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 232 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 73, ஹர்திக் பாண்டியா 63 ரன்களை எடுத்தனர்.

அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா முடிந்தளவு போராடியும் 20 ஓவரில் 201/8 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 65 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதனால் டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோல்வியை பரிசளித்த தென்னாப்பிரிக்காவுக்கு ஒருநாள் தொடரையும் சேர்த்து டி20 தொடரையும் வென்று இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

ஆட்டநாயகன் பாண்டியா:

இந்த வெற்றிக்கு 63 ரன்கள், 1 விக்கெட் எடுத்து ஆல்ரவுண்டராக முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகன் விருது வென்றார். குறிப்பாக 16 பந்தில் 50 ரன்கள் அடித்த அவர் யுவ்ராஜ் சிங்கிற்கு (12 பந்துகள்) பின் இந்தியாவுக்காக 2வது வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்நிலையில் இந்த சாதனை படைத்தது தமக்குத் தெரியாது என்று பாண்டியா தெரிவித்துள்ளார்.

அந்த சாதனை பட்டியலில் யுவராஜ் சிங் மேலே இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவிக்கும் அவர் காயத்திலிருந்து வலுவாக கம்பேக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணமே தம்முடைய அதிரடி ஆட்டத்திற்கு காரணம் என்று கூறியுள்ளார். இது பற்றி பாண்டியா பேசியது பின்வருமாறு. “போட்டிகளை வெல்வதற்காகவே நீங்கள் விளையாடுகிறீர்கள்”

- Advertisement -

அதிரடியின் ரகசியம்:

“அணிக்காக நீங்கள் பங்காற்றி வெற்றியின் கோட்டைத் தாண்ட வைப்பது எப்போதுமே உங்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும். 2வது வேகமான அரை சதத்தை இந்தியாவுக்காக அடித்தது எனக்குத் தெரியாது. எங்களுடைய சமூக வலைதள நிர்வாகிகள் என்னிடம் அதைச் சொன்னார்கள். அதைக் கேட்டதும் முதலிடத்தை தவற விட்டு விட்டேனே என்பதே என்னுடைய முதல் ரியாக்சன். ஆனால் யுவ்ராஜ் பா அந்த சாதனையை வைத்துள்ளதில் மகிழ்ச்சி”

“இன்று முதல் பந்திலேயே இறங்கி சிக்ஸர் அடிக்கப் போகிறேன் என்று எனது பார்ட்னரிடம் ஆரம்பத்திலேயே சொன்னேன். அது வேலை செய்யும் என்ற தன்னம்பிக்கை எனக்கு இருந்தது. சூழ்நிலையும் என்னுடைய ஸ்டைலுக்கு பொருந்தியதால் எனக்கு நானே ஆதரவு கொடுத்து விளையாடியது வேலை செய்தது. கணக்கிட்டு ரிஸ்க் எடுத்த எனக்கு விஷயங்கள் நல்ல வழியில் வந்தன”

இதையும் படிங்க: இதை தான் மிஸ் பண்ணோம்.. இந்தியாவின் வெற்றிக்கு இதான் காரணம்.. கம்பேக் கொடுப்பேன்.. சூரியகுமார் பேட்டி

“எப்போதும் நான் சவால்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்கிறேன். எவ்வளவு பின்னடைவுகள் வந்தாலும் வலுவாக சிறப்பாக கம்பேக் கொடுத்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதே இலக்காகும். அவை அனைத்தும் சேர்ந்து வரும் போது திருப்தியளிக்கிறது. தயாராகி, திட்டமிட்டு, கடினமாக உழைக்கும் எனது பயணம் தொடரும்” என்று கூறினார்

Advertisement