தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற 5வது டி20 போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 232 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 73, ஹர்திக் பாண்டியா 63, சஞ்சு சாம்சன் 37, அபிஷேக் சர்மா 34 ரன்களை எடுத்தனர்.
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவரில் 201/8 ரன்களை எடுத்து போராடி தோற்றது. அதிகபட்சமாக குவிண்டன் டீ காக் 65, தேவால்ட் ப்ரேவிஸ் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 3 – 1 (5) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது.
அதிரடி இந்திய அணி:
அத்துடன் டெஸ்ட் தொடரில் படுதோல்வியை பரிசளித்த தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்து நடைபெற்ற ஒருநாள், டி20 தொடர்களை வென்று இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. இந்நிலையில் இப்போட்டியில் அடித்து நொறுக்க வேண்டும் என்ற தங்களுடைய டி20 அணுகுமுறையை சுணக்கமில்லாமல் செய்ததே வெற்றிக்கு காரணம் என்று இந்திய கேப்டன் சூரியகுமார் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் தம்முடைய ஃபார்மை தவிர்த்து மற்ற அனைத்தும் நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் தாம் கம்பேக் கொடுப்பேன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்ருமாறு. “தொடரின் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் விளையாடும் கிரிக்கெட்டின் குறிப்பிட்ட பிராண்டில் நிற்க விரும்பினோம். அதை இப்போட்டியில் கச்சிதமாக செய்தோம். எதையும் அதிகமாக முயற்சிக்கவில்லை. அனைத்து துறைகளிலும் வெளிப்படுத்த விரும்பிய எங்கள் வீரர்கள் அனைவருக்கும் நல்ல முடிவுகள் வந்து கிடைத்துள்ளது”
சூரியகுமார் கம்பேக் கொடுப்பான்:
“இதைத் தான் கடந்த சில தொடர்களில் நாங்கள் மிஸ் செய்ததாக கருதுகிறோம். இப்படித்தான் நாங்கள் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். ஒருமுறை அதிரடியை துவங்கி விட்டால் நிற்கக்கூடாது. இடைவிடாமல் அடிக்கும் நோக்கத்துடன் நாங்கள் விளையாடியது இன்று அழகாக வேலை செய்தது. இன்று பவர்பிளேவில் பும்ராவை ஒரு ஓவரில் மட்டும் பயன்படுத்தி மிடில் ஓவர்களை கட்டுப்படுத்தி விட்டு, டெத் ஓவர்களில் மீண்டும் அவரை பயன்படுத்துவதே எங்களுடைய திட்டமாகும்”
இதையும் படிங்க: 30 ரன்ஸ்.. 25 வருட வரலாற்று தோல்விக்காக தெ.ஆ அணிக்கு.. டபுள் பதிலடி கொடுத்த இந்தியா வெற்றி
“வாஷிங்டன் சுந்தரும் சிறப்பாக வந்து பொறுப்பை எடுத்துக் கொண்டார். சில சமயங்களில் நாங்கள் அழுத்தத்தையும் சவாலையும் சந்தித்தோம். ஆனால் அங்கே தான் நீங்கள் பதிலளிக்க வேண்டும். அதை எங்கள் வீரர்கள் நன்றாக செய்தனர். நாங்கள் விரும்பிய அனைத்தையும் செய்துள்ளோம். சூரியகுமார் எனும் பேட்ஸ்மேனை கண்டறியாததே நாங்கள் தவற விட்ட ஒரு விஷயமாக இருக்கலாம். எங்கேயோ தொலைந்த அவர் வலுவாக கம்பேக் கொடுப்பார். எங்கள் அணி தடுமாறும் போது யாரோ ஒருவர் கையை உயர்த்தி அசத்துவது கேப்டனாக எனக்குத் திருப்தியைக் கொடுக்கிறது” எனக் கூறினார்.



