காயம் காரணமாக இந்தியாவில் இருக்கும் ஹார்டிக் பாண்டியா என்ன செய்து கொண்டிருக்கிறார் பாருங்கள் – புகைப்படம் இதோ

Pandya

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஆன ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் மூன்று வகை கிரிக்கெட்டிலும் இடம்பெற்று விளையாடி வருகிறார். உலகக்கோப்பை தொடரின்போது ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பாண்டியா விளையாடவில்லை.

View this post on Instagram

New experience but a fun one ????

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

இந்நிலையில் தற்போது இந்தியாவில் இருக்கும் பாண்டியா காயத்திற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டு உடற்பயிற்சியை செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது லேக்மீ அழகு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட பேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்ற ஹர்திக் பாண்டியா கலந்துகொண்டு ராம்ப் வாக் செய்தார்.

மேலும் இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வித்தியாசமான அனுபவம் இருந்தாலும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தனது கருத்தினை பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் தொடர்ந்து பாண்டியாவின் இந்த பதிவை பகிர்ந்து கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.