நேற்றைய போட்டியில் இந்திய அணியின் துணைக்கேப்டன் யார் தெரியுமா ? – ஆறுதல் பரிசா ?

Gowtham
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 225 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க அடுத்ததாக 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 39 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி ஆறுதல் வெற்றி அடைந்தாலும் இந்திய அணிக்கு எதிராக 2 க்கு 1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டனான புவனேஷ்வர் குமார் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக யார் துணை கேப்டனாக ? விளையாடினார் என்பதில்தான் ஒரு சிறப்பான விடயம் உள்ளது.

நேற்றைய போட்டியில் இந்திய அணிக்காக அறிமுக வீரர்களாக சஞ்சு சாம்சன், நிதீஷ் ராணா, கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் சாகர் மற்றும் சேத்தன் சர்க்காரியா ஆகிய ஐந்து வீரர்கள் விளையாடினார்கள்.

Bhuvi

இதன் காரணமாக இந்திய அணியில் யார் துணை கேப்டனாக செயல்படுவார்கள் ? என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நேற்றைய போட்டியில் அனுபவ வீரரான ஹார்டிக் பாண்டியா துணை கேப்டனாக செயல்பட்டார். ஏற்கனவே இந்த இலங்கை தொடருக்கான வீரர்கள் தேர்வின் போது இந்திய அணி கேப்டனாக தவான் மற்றும் பாண்டியா இருவருக்கும் இடையே பலமான போட்டி இருந்தது.

pandya 1

பின்னர் அனுபவத்தின் அடிப்படையில் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் துணை கேப்டனாக பாண்டியா செயல்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மற்றொரு அனுபவ புவனேஷ்வர் குமாருக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது. நேற்றைய போட்டியில் புவனேஸ்வர் குமார் விளையாடாத காரணத்தினால் ஹார்டிக் பாண்டியா துணைக்கேப்டனாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement