- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஏற்கனவே ஐ.பி.எல் தொடரில் கடைசி இடம்.. இப்போ இதுவேறயா – குடும்ப பிரச்சனையில் சிக்கினாரா பாண்டியா?

ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்டு 14 போட்டிகளில் 10 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தினை பிடித்து வெளியேறியது. பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணி இப்படி மோசமான தோல்வியை தழுவியது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

ஏற்கனவே சாம்பியன் கேப்டனான ரோகித் சர்மாவை மாற்றி புதிய கேப்டனாக பாண்டியாவை நியமித்ததற்கு ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்திருந்த வேளையில் இந்த தோல்வி அவர்களை பெரிய அளவில் பாதித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது பாண்டியாவின் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக ஏற்பட்ட அந்த அழுத்தம் தான் மும்பை அணியின் தோல்வியிலும் பிரதிபலித்திருக்கிறது என்பது போன்ற சில கருத்துக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் ஓரளவிற்கு பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனை இருப்பது உறுதியாகி உள்ளது. அதாவது கடந்த 2020-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட ஹார்டிக் பாண்டியாவிற்கு அகஸ்தியா என்கிற ஒரு குழந்தையும் இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் பாண்டியாவின் மனைவி நட்டாஷா ஸ்டான்கோவிக் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போது மைதானத்திற்கு நேரில் வந்து மும்பை அணிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதேபோன்று சமூக வலைதளத்தில் இருந்தும் பாண்டியாவுடன் எடுத்துக் கொண்ட அனைத்து புகைப்படங்களையும் அவர் நீக்கிவிட்டதால் அவர்கள் இருவருக்கும் இடையே விரிசல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 3 ஓவரில் ஈஸியா சேசிங் செய்ய வேண்டிய டார்கெட்.. வெற்றி மாறியிருக்கும்.. ஆனா ஏன் செய்யல.. பாபர் விளக்கம்

மேலும் கடந்த மூன்று மாதங்களாகவே அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றும் தனித்தனியே இருப்பதால் விரைவில் விவாகரத்து பெற இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் பாண்டியாவோ அல்லது அவரது மனைவியோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by