GT vs RCB : இதைவிட வேற என்ன வேணும்? ஆர்.சி.பி அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு – ஹார்டிக் பாண்டியா அளித்த பேட்டி இதோ

Hardik Pandya
- Advertisement -

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 70-வது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய ஆர்.சி.பி அணியானது குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. பெங்களூரு அணி பெற்ற இந்த தோல்வியினால் மும்பை அணி நான்காவது அணியாக நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதன்படி நேற்று பெங்களூரு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்யவே முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களை குவித்தது.

Kohli

- Advertisement -

பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 19.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் குஜராத் அணி 20 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்தது. இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் :

எங்களது அணி வீரர்கள் அனைவருமே இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றியை தேடித் தந்துள்ளனர். பிளே ஆப் சுற்றிற்கு நாங்கள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தாலும் வெற்றியுடன் நல்ல முமென்ட்டத்தோடு அடுத்த சுற்றுக்கு செல்ல விரும்பினோம். அந்த வகையில் இன்றைய போட்டியில் அனைத்து துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. சுப்மன் கில்லுக்கு எப்பொழுது எப்படி விளையாட வேண்டும் எந்தெந்த இடத்தில் விளையாட வேண்டும் என்று நன்றாக தெரியும்.

Shubman Gill

தற்போது அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது ஆட்டம் எங்கள் அணிக்கு மேலும் பலத்தை சேர்த்துள்ளது. இந்த போட்டியில் 197 ரன்கள் பெங்களூரு அணி குவித்த போது எங்களால் சேசிங் செய்ய முடியும் என்று நினைத்தோம். ஆனாலும் பந்துவீச்சில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும். இந்த போட்டியில் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி அசத்தினார்.

- Advertisement -

அதே வேளையில் சேசிங்கின் போது எங்களது வீரர்களும் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றியை தேடித்தந்துள்ளனர். இந்த வெற்றியை விட வேறு என்ன நான் எங்களது அணி வீரர்களிடம் இருந்து கேட்க முடியும். கடந்த ஆண்டு நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடினோம்/ எல்லாமே நாங்கள் நினைத்தது போன்று சென்றது. இந்த ஆண்டு சில சவால்களை எதிர்பார்த்தோம்.

இதையும் படிங்க : MI vs SRH : இந்த சீசனை நாங்க நல்லா ஆரம்பிக்கல. ஆனா.. கடைசி போட்டியின் வெற்றிக்கு பிறகு – ரோஹித் அளித்த பேட்டி இதோ

எந்த அணியாவது எங்களுக்கு சவாலை அளிக்குமா? என்று எதிர்பார்த்தோம். ஆனால் இதுவரை எங்களது அணி வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று தந்துள்ளனர். இந்த தொடர் முழுவதுமே நாங்கள் பெற்ற வெற்றிக்கு அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே காரணம் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement