உண்மையிலேயே பாண்டியா நம்ம தோனியின் சிஷ்யன் தாங்க. தோல்வி அடைந்த பிறகும் பெருந்தன்மையை காண்பித்த – நெகிழ்ச்சி செயல்

Pandya-and-Dhoni
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி துவங்கிய 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது மே 29-ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. இந்த ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

CSK 2023

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வியடைந்த பிறகு குஜராத் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா மைதானத்தில் நடந்து கொண்ட விதம் உண்மையிலேயே அவர் தோனியின் சிஷ்யன் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது. ஏற்கனவே பலமுறை தோனி தான் தனக்கு முன்மாதிரி, அவரிடம் இருந்து நான் பல்வேறு விடயங்களை கற்று வருகிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த இறுதிப்போட்டியில் கடைசி பந்தில் தோல்வியடைந்தாலும் சற்றும் விரக்தி அடையாமல் எந்தவொரு ஏமாற்றத்தையும் முகத்தில் காண்பிக்காத பாண்டியா தோல்விக்கு பிறகும் : நல்லவர்களுக்கு நல்லதுதான் நடக்கும். அவரிடம் தோற்றத்தில் எனக்கு எந்தவொரு நெருடலும் இல்லை என தோனி குறித்து நெகிழ்ச்சியாக கூறினார்.

Mohit sharma

இவற்றிற்கெல்லாம் ஒருபடி மேலாக போட்டியின் கடைசி 2 பந்துகளில் மோஹித் சர்மா 10 ரன்களை விட்டுக்கொடுத்து கையில் இருந்த வெற்றியை தாரை வார்த்து கொடுத்தாலும் அவரை ஹார்டிக் பாண்டியா தேற்றிய விதம் அப்படியே தோனியை நம் கண் முன்னே கொண்டு வந்தது. ஏனெனில் வழக்கமாக ஒரு அணி தோல்வியை சந்திக்கும்போது தோல்விக்கு காரணமாக இருக்கும் வீரர்கள் மீது கேப்டன்கள் சற்று அதிருப்தியுடன் இருப்பார்கள்.

- Advertisement -

ஆனால் மிக முக்கியமான இறுதிப்போட்டியில் மோஹித் சர்மா வெற்றியை தவறவிட்டு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், அழுதுகொண்டிருந்த அவரை கட்டியணைத்து அவரின் சிறப்பான போராட்டத்தினை பாராட்டிய ஹார்டிக் பாண்டியா மனதளவில் அவரை தேற்றினார். வழக்கமாக தோனி தான் இதுபோன்று சற்று ஏமாற்றத்தை அளிக்கும் வீரர்களுக்கு ஆதரவு வழங்கி மனதளவில் அவர்களை பலப்படுத்துவார். அதன்பிறகு அவர்களும் சிறப்பாக செயல்படுவார்கள்.

இதையும் படிங்க : CSK vs GT : குஜராத் அணி தோக்க ஆசிஷ் நெஹ்ரா தான் காரணம். விளக்கத்துடன் விமர்சிக்கும் ரசிகர்கள் – ஒருவேளை இருக்குமோ?

அந்த வகையில் கேப்டனாக பெரிய தோல்வியை சந்தித்தாலும் எந்தவொரு கோபத்தையும் வெளிக்காட்டாமல் அனுபவ வீரரான மோஹித் சர்மாவை பாண்டிய கட்டியணைத்து தேற்றியது பார்ப்பவர்களையும் நெகிழவைத்தது. இந்திய அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்படும் ஹார்டிக் பாண்டியாவின் கேப்டன்சி தோனியை போன்றே உள்ளது என்று பலரும் பாராட்டி வரும் வேளையில் பாண்டியன் இந்த செயல் மேலும் அவரது கேப்டன்சியின் மீதுள்ள மரியாதையை கூடியுள்ளது என்றே கூறலாம்.

Advertisement