ஆண்ட்ரு சைமன்ட்ஸ் அகால மரணம். ஹர்பஜன் சிங் வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு – விவரம் இதோ

Harbhajan Symonds
- Advertisement -

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 1998-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகி கடந்த 2009-ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக மூன்று விதமான கிரிக்கெட்டிலும் விளையாடியுள்ள அவர் 26 டெஸ்ட் போட்டிகள், 198 ஒருநாள் போட்டிகள் மற்றும் 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

symonds

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக ஆஸ்திரேலிய அணிக்கு பங்காற்றிய சைமண்ட்ஸ் ஐபிஎல் தொடரிலும் 2008ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை 39 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட பணிகளையே செய்து வந்தார்.

இந்நிலையில் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இன்று தனது 46-வது வயதில் திடீரென சாலை விபத்தில் சிக்கி அகால மரணம் அடைந்துள்ளார். அவரது இந்த இறப்புச் செய்தி வெளியானதிலிருந்து பல்வேறு தரப்பிலும் இருந்தும் இரங்கல் பதிவுகள் வெளியாகி வருகின்றன. வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள டவுன்ஸ்வில் என்கிற இடத்தில் அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து நடைபெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அவரது இந்த மறைவு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அவருடன் பயணித்த வீரர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. அந்தவகையில் சைமன்ட்சுடன் பல சர்ச்சைகளில் ஈடுபட்ட இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தற்போது அவரது இந்த மறைவிற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் குறிப்பிட்டதாவது : ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இப்படி திடீரென மறைந்த செய்தியை கேட்டதும் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. மிகவும் விரைவாக சென்று விட்டீர்கள் நண்பா. சைமண்ட்ஸ்ஸை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் 35 வயதுக்கு பின் அதிக ரன்கள் எடுத்த டாப் 6 பேட்ஸ்மேன்கள் – லிஸ்ட் இதோ

உங்களது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார். ஆண்ட்ரு சைமண்ட்ஸ் உடன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஹர்பஜன் சிங் அதன்பின் ஐ.பி.எல் தொடரில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்து விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement