கொல்கத்தா அணியை வென்ற பிறகு, தரை லோக்கலில் இறங்கி சென்னை பாஷை பேசிய ஹர்பஜன்சிங் – ட்விட்டரில் வைரல் !

bhajii

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியை வென்ற மகிழ்ச்சியை கொண்டாடிடும் விதமாக ஹர்பஜன்சிங் மீண்டும் தமிழில் டிவீட் செய்து அசத்தியுள்ளார்.சென்னை சூப்பர்கிங்ஸ்-கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில் சென்னை அணி அபாரமாக விளையாடி வெற்றிபெற்றது.

bhajii

பல்வேறு போராட்டங்களை தாண்டியும் சென்னை சூப்பர்கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திட்டமிட்டபடி நடைபெற்றது.முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக ஆன்ட்ரூ ரஸ்ஸல் 36 பந்துகளில் 11சிக்ஸர் உட்பட 1பவுண்டரிகளுடன் 88 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.அடுத்ததாக சென்னை அணி 20ஓவர்களில் 203 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்கை நோக்கி ஆட்டத்தை தொடங்கியது.சென்னை அணியின் சார்பில் ஷேன்வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் தொடக்கவீரர்களாக களமிறங்கினர்.20 ஓவர்களில் 203 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி காட்ட தொடங்கினர்.

சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 5.5 ஓவர்களில் 75 ரன்களை கடந்திருந்தபோது 19 பந்துகளில் 3பவுண்டரிகள், 3சிக்ஸருடன் 42 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அமைத்து தந்தார்.கடைசி இரண்டு பந்துகளில் வெற்றிக்கு நான்கு ரன்களை தேவை என்கிற பரபரப்பான சூழலில் வினய்குமார் வீசிய 5வது பந்தில் அபாரமாக சிக்ஸர் அடித்து சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார் ஜடேஜா.

- Advertisement -

சென்னை அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கான 203 ரன்களை எடுத்து 5விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.இரண்டாண்டு தடைக்கு பின்னர் சொந்த மண்ணில் களமிறங்கிய சென்னை அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றவுடன் தன்னுடைய இரண்டாவது வெற்றியையும் இந்த ஐபிஎல் சீசனில் பதிவுசெய்தது.இந்த வெற்றியை கொண்டாடிடும் விதமாக சென்னை சூப்பர்கிங்ஸின் அணியை சேர்ந்த ஹர்பஜன்சிங் டிவிட்டரில் தமிழில் டிவீட் செய்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஹர்பஜன்சிங் டிவீட்டில் “மெட்ராஸ்ல இருக்குது கிண்டி, நீ ஓட்றதோ பெட்றோல் போட்ட வண்டி, நீ அடிக்குற பந்து பொயிற்மாடா என்ன தாண்டி, சென்னை கூட ஆடினா உனக்கு அல்லு கேரண்டி, போயிறுவியா என் ஏரியாவ தாண்டி, செம்ம மேட்ச் மாமா” என்று தரை லோக்கலில் சென்னை பாஷையில் டிவீட் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.தற்போது ஹர்பஜன்சிங்கின் இந்த டிவீட்டை ரசிகர்கள் பலரும் சேர் செய்து வருகின்னறனர்.