அவரை மட்டும் ஏன் சோதிக்கிறீங்க ? தேர்வுக்குழுவை மாற்றுங்க – ஹர்பஜன் ஆதங்கம்

Harbhajan

இந்திய அணி தற்போது வங்கதேச அணியுடனான கிரிக்கெட் தொடரை முடித்தது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

Rishab Pant

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது இந்த அணியில் மீண்டும் கீப்பராக பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அனுபவ வீரரான மகேந்திர சிங் தோனிக்கு இந்த தொடரிலும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்ற சஞ்சு சாம்சன் ஒரு போட்டியில் கூட இறக்கப்படவில்லை.

மேலும் திடீரென்று தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அந்த தொடரில் சிறப்பாக விளையாடாத பண்டுக்கு இத்தொடரில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது ஆனால் சாம்சன் அணியில் இடம்பெறவில்லை இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனது பக்கத்தில் பதிவிட்டதாவது :

தேர்வுக்குழுவினர் சாம்சனின் மனநிலையை சோதித்து பார்க்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவில் நல்ல பலம் வாய்ந்தவர்கள் இடம்பெறவேண்டும். பிசிசிஐ தலைவர் கங்குலி இதனை மாற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன் என்று ஹர்பஜன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -