துரதிஸ்டவசமாக நிராகரிக்கப்பட்ட கேல் ரத்னா விருதுக்காண பரிந்துரை வருத்தத்தில் – ஹர்பஜன் சிங் காரணம் இதுதான்

Harbhajan
- Advertisement -

பஞ்சாப் அரசு சார்பில் கேல் ரத்னா விருதுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் பெயரை மத்திய அரசுக்கு பஞ்சாப் அரசு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் ஹர்பஜன் சிங்கின் கேல்ரத்னா விருதுக்கு பரிந்துரையை மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இதனால் ஹர்பஜன் சிங் தற்போது வருத்தமடைந்துள்ளார்.

harbhajansingh

- Advertisement -

அவருடைய கேல் ரத்னம் விருதுக்கான பரிந்துரை நிராகரிக்கப்பட்டது காரணம் யாதெனில் ஆவணங்களை சமர்ப்பித்ததில் ஏற்பட்ட தாமதமே. அதன் காரணமாக அவருடைய கேல்ரத்னா விருது பரிந்துரை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வீடியோ மூலம் குறிப்பிட்டதாவது :

கேல் ரத்னா விருதுக்கான ஆவணங்களை பஞ்சாப் அரசு தாமதமாக அனுப்பியதால் மத்திய அரசு என் விருதினை நிராகரித்து விட்டதாக செய்திகள் மூலம் தெரிந்து கொண்டேன். அதனால் இந்த வருடம் இந்த விருதுக்கான பரிந்துரையில் எனது பெயர் இடம்பெறவில்லை. மார்ச் மாதம் 20ஆம் தேதி நான் அலுவலகத்திற்கு ஆவணங்களை சமர்ப்பித்து விட்டேன். ஆனால் அந்த ஆவணங்கள் 10 முதல் 15 நாட்களில் சென்றிருக்க வேண்டும். ஆனால் உரிய நேரத்தில் ஆவணங்கள் சென்றடையவில்லை.

உரிய நேரத்தில் எனது ஆவணங்கள் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டு இருந்தால் இந்த வருடம் கேல் ரத்னா விருது எனக்கு கிடைத்திருக்கும். அப்படி எனக்கு விருது கிடைத்து இருந்தால் அது மற்றவர்களுக்கும் ஊக்கமாக இருந்திருக்கும். ஆனால் ஆவணத்தில் ஏற்பட்ட தாமதத்தின் காரணத்தினால் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. நான் இப்போதும் வருத்தம் அடைய வில்லை எனது பெயர் இந்த வருடம் பரிந்துரை செய்யப்படவில்லை என்றாலும் அடுத்த வருடமாவது குறிப்பிட்ட நேரத்தில் பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று ஹர்பஜன் சிங் வீடியோ மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

harbhajan

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயரில் அது 1991-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. கிரிக்கெட் துறையை பொருத்தவரை சச்சின், தோனி மற்றும் கோலி ஆகியோர் கேல் ரத்னா விருது பெற்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement