டி20 உலகக்கோப்பையில் விளையாட முழு தகுதியானவர் இவர். கண்டிப்பா சேர்க்கலாம் – ஹர்பஜன் ஆதரவு

Harbhajan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்று உள்ளதால் இந்த ஆண்டு பல இளம் வீரர்களுக்கு சர்வதேச வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் பல இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பினை அற்புதமாக பயன்படுத்தி விளையாடி வருவதால் இந்த தொடரானது அற்புதமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களை தவிர்த்து பல்வேறு வீரர்களும் மிகச்சிறப்பாக தங்களது செயல்பாட்டினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

PBKS vs SRH

- Advertisement -

இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான தேர்வில் தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் இருக்கும் வீரர்களின் திறமையை தாண்டியும் தற்போது இளம் வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் யாரை அணியில் எடுப்பது என்கிற முக்கிய தலைவலியே பிசிசிஐ-க்கு ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் இந்திய அணியில் தற்போது இருக்கும் நட்சத்திர வீரர்கள் ஐபிஎல் தொடரில் சொதப்பி வருவதும் இளம் வீரர்கள் ஜொலித்து வருவதும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் தற்போது உலககோப்பை டி20 அணியில் எந்தெந்த வீரர்கள் இடம் பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : தற்போது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் உம்ரான் மாலிக் உலகக் கோப்பை இந்திய அணியில் விளையாட தகுதியானவர் என்று நினைக்கிறேன். விரைவில் அவர் இந்திய அணியின் நீலநிற சீருடையில் விளையாடுவார் என்பது என்னுடைய கணிப்பு. நிச்சயம் என்னை பொறுத்தவரை டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட அவர் தகுதியானவர்.

- Advertisement -

ஏனெனில் ஆஸ்திரேலியா போன்ற மைதானங்களில் 145+ கிலோ மீட்டருக்கு மேல் வேகம் வீசும் இந்திய பந்துவீச்சாளர்கள் நிச்சயம் இந்திய அணிக்கு தேவை. இதே போன்று தொடர்ச்சியாக அதி வேகத்தில் வீசும் உம்ரான் மாலிக் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தனது பந்துவீச்சின் மூலம் ஆதிக்கத்தை செலுத்துவார்.

இதையும் படிங்க : கொரோனா பாதிப்பு எச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட ஐ.பி.எல் அணியின் பயிற்சியாளர் – என்ன ஆச்சு?

இளம்வீரரான அவருக்கு நிர்வாகம் சார்பில் சரியான வழிகாட்டுதல் இருந்தால் மிகப்பெரிய பந்து வீச்சாளராக இந்திய அணிக்காக வலம் வருவார் என்றும் ஹர்பஜன் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement