- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நீங்கலாம் பேட்ஸ்மேன்னு வெளிய சொல்லாதீங்க. சீனியர் வீரரை லெப்ட் அண்ட் ரைட் விட்டு வெளுத்து வாங்கிய – ஹர்பஜன்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய அணி பெரிய போராட்டமின்றி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி இரண்டாவது ஆட்டத்தில் வெறும் 90 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து ஒரு கத்துக்குட்டி அணி போல் திணறியது.

குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் நன்றாக ஆடிய அஜின்கியா ரஹானே நியுஸிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்துகளை பார்த்து பேட்டிங்கே ஆடத்தெரியாத வீரரை போல் திணறினார் .
ஜேமிஷன் மற்றும் வாக்னர் ஆகியோரது பந்துகளை தாக்குப்பிடிக்க முடியாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு ஏதேதோ செய்து கொண்டிருந்தார்.

- Advertisement -

இவர்களின் பந்தில் 2 முறை ஹெல்மெட்டில் அடி வாங்கிய ரஹானே, அதன்பின்னர் அதனை தாக்குப்பிடிக்க முடியாமல் 9 ரன்களில் தனது ஸ்ட்ம்புகளை பறி கொடுத்து வெளியேறினார்.
இந்த ஆட்டத்தை பார்க்கும்போது ஏதோ பந்துவீச்சாளர் பேட்டிங் செய்வது போல் இருந்தது என்று ஹர்பஜன்சிங் காட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது :

அஜின்கியா ரஹானே டெய்ல்-எண்டர் போல் விளையாடினார். அவர் ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதை மறந்து விட்டார் போலும். இது ரஹானேவின் மிகவும் மோசமான இன்னிங்ஸ் என்று விமர்சித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

- Advertisement -
Published by