சுப்மன் கில்லால் டி20யில் முடியாதுன்னு நினைக்காதீங்க.. கோலி மாதிரி இந்த 2யும் செய்வாரு.. ஹர்பஜன் ஆதரவு

Harbhajan Singh
- Advertisement -

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி களமிறங்க உள்ளது. அந்த அணியில் சுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது நிறைய முன்னாள் வீரர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

ஏனெனில் இங்கிலாந்தில் நிறைவு பெற்ற டெஸ்ட் தொடரில் 754 ரன்கள் அடித்த அவர் பல சாதனைகளைப் புரிந்து தொடரை சமன் செய்ய உதவினார். எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் அவரை இந்திய டி20 அணியில் விளையாட வைப்பது வெற்றிக்கு உதவும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இருப்பினும் கிளாஸ் வீரரான கில் கடந்த காலங்களில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடவில்லை.

- Advertisement -

விராட் கோலி மாதிரி:

அதனால் அவருக்கு பதில் அதிரடியாக விளையாடக்கூடிய ஜெய்ஸ்வால் களமிறங்க வேண்டும் என்பது மற்றொரு தரப்பினரின் வாதமாக இருக்கிறது. இந்நிலையில் சுப்மன் கில்லால் டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாட முடியாது என்று நினைப்பது தவறு என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். விராட் கோலியை போல சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் அதிரடியாகவும் நங்கூரமாகவும் விளையாடும் திறமை கில்லிடம் இருப்பதாக ஹர்பஜன் கூறியுள்ளார்.

எனவே அவருக்கு ஆசியக் கோப்பையில் வாய்ப்பளிக்கப்பட வேண்டுமென்று தெரிவிக்கும் ஹர்பஜன் இது பற்றி பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் அதிரசியகா விளையாடுவது மட்டும் முக்கியம் கிடையாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை சுப்மன் கில் அட்டாக் செய்ய முடிவெடுத்தால் மற்றவர்களைப் போல அவராலும் அதிரடியாக விளையாட முடியும். ஏனெனில் மிகவும் திடமான வீரரான அவரிடம் வலுவான அடிப்படை இருக்கிறது”

- Advertisement -

ஹர்பஜன் ஆதரவு:

“அவரைப் போன்ற வலுவான அடித்தளம் கொண்ட பிளேயர் எந்த ஃபார்மட்டிலும் ரன்களை குவிக்க முடியும். இத்தனைக்கும் அவர் ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் நல்ல ரன்கள் அடித்துள்ளார். ஆரஞ்சு தொப்பியையும் (2023இல்) வென்ற அவரால் 120 – 130 ஸ்ட்ரைக் ரேட்டில் மட்டுமல்ல, 160 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பேட்டிங் செய்ய முடியும். ஆம் அபிஷேக், சூரியகுமார், திலக் வர்மா ஆகியோர் இருக்கிறார்கள்”

இதையும் படிங்க: சாம்சன் மற்றும் திலக் வர்மாவுக்கு இடமில்லை.. ஆசிய கோப்பை தொடருக்கான தனது அணியை அறிவித்த – ஹர்பஜன் சிங்

“அதற்காக நீங்கள் சுப்மன் கில்லை குறைத்து மதிப்பிட முடியாது. மிகவும் திறமையான அவரால் எந்த ஃபார்மட்டுக்கும் தகுந்தாற்போல் தன்னை உட்படுத்திக் கொள்ள முடியும். ஆல் ஃபார்மட் பிளேயரான அவரால் டி20 கிரிக்கெட்டிலும் விளையாடி டாமினேட் செய்ய முடியும் என்று நான் கருதுகிறேன். ரசிகர்களான நாம் ஒவ்வொரு பந்திலும் சிக்ஸர் அல்லது பவுண்டரியை பார்க்க விரும்புகிறோம். ஆனால் சில நேரங்களில் உங்களுக்கு சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடி அணியை காப்பாற்ற வேண்டிய பேட்ஸ்மேன்களும் தேவை” என்று கூறினார்.

Advertisement