2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் செப்டம்பர் 28-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் என மொத்தம் எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கின்றன. அதனால் அனைவரது பார்வையும் இந்த தொடரின் மீது திரும்பியுள்ளது.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவித்த : ஹர்பஜன் சிங்
இந்த தொடரின் இறுதிவரை சென்று கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. அதோடு இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அணி வீரர்களின் பட்டியலை மற்ற நாடுகள் வெளியிட்டு வரும் வேளையில் இந்திய அணியும் ஆகஸ்ட் 19-ஆம் தேதி தங்களது வீரர்களின் பட்டியலை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோரது தலைமையில் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வு எவ்வாறு இருக்கும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் ஹர்பஜன் சிங் தனக்கு விருப்பமான ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அந்த அணியில் : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் நீக்கப்பட்டது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில் அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் : யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார்.
அவர்களை தவிர்த்து அபிஷேக் சர்மா, சூரியகுமார் யாதவ், ஹார்டிக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், கே.எல் ராகுல், ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு அவர் இடம் அளித்துள்ளார். அந்தவகையில் ஹர்பஜன் சிங் தேர்வு செய்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி இதோ :
இதையும் படிங்க : என்னையா இங்கிலாந்து தொடரில் சேக்கல.. தேர்வுக்குழுவினருக்கு தனது பேட்டால் பதிலளித்த சர்பராஸ் கான் – விவரம் இதோ
யாஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூரியகுமார் யாதவ், ஹார்டிக் பாண்டியா, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், கே.எல் ராகுல், ஜஸ்ப்ரீத் பும்ரா



