சி.எஸ்.கே மும்பை வேணாம்.. இந்த அணிதான் இம்முறை ஐ.பி.எல் கப் ஜெயிக்கனும் – ஹர்பஜன் சிங் விருப்பம்

Harbhajan
- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் வேளையில் இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. எதிர்வரும் 18வது சீசனானது 2025 மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கோலாகலமாக துவங்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்து இருந்தது.

அந்த அணிதான் வெற்றிபெற வேண்டும் : ஹர்பஜன் சிங்

இவ்வேளையில் இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது தங்களது சொந்த மண்ணில் பெங்களூரு ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் விளையாட இருக்கிறது. அதனை அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்த ஐபிஎல் தொடரானது ரசிகர்களுக்கு விருந்து அளிக்கவுள்ளது.

- Advertisement -

இவ்வேளையில் இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி வெற்றி பெற வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் இந்து தொடரில் எந்த அணி வெற்றி பெற வேண்டும்? என்பது குறித்த தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை பஞ்சாப் அணிதான் கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் நான் ஒரு பஞ்சாபி அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை என்னிடம் உள்ளது. அதோடு ஐபிஎல் தொடரில் ஒரு புதிய அணி சாம்பியனாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

- Advertisement -

இதுவரை அனைத்து தொடர்களிலும் பங்கேற்று விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது இரண்டு முறை மட்டுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதிலும் குறிப்பாக 2014 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை சென்ற பஞ்சாப் அணி கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவியது.

இதையும் படிங்க : அந்த அணிதான் வெற்றிபெற வேண்டும் : ஹர்பஜன் சிங்

ஆனால் அதற்கு அடுத்து பத்து ஆண்டுகளில் ஒரு முறை கூட அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத வேளையில் இம்முறை ஷ்ரேயாஸ் ஐயரின் தலைமையில் பாண்டியன் பயிற்சியின் கீழ் அந்த அணி களம் இறங்க இருப்பது அந்த அணியின் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement