ஹைடன், ஹசி இடத்தில்.. குலுங்கும் திரிபாதியை தூக்கிட்டு அவரை போடுங்க.. சிஎஸ்கே ஜெய்க்க வழி சொன்ன ஹர்பஜன்

Harbhajan Singh 2
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது முதல் போட்டியில் வென்றது. ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தானுக்கு எதிராக 197, 183 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் சென்னை பரிதாபமாக தோற்றது. இது போக 2019க்குப்பின் 180+ ரன்களை துரத்திய 9 போட்டிகளிலும் சென்னை தோல்வியை சந்தித்துள்ளது.

இதற்கு ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர் போன்ற அந்த அணியின் மோசமான பேட்டிங் வரிசை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு காலத்தில் மேத்தியூ ஹைடன், மைக் ஹசி, ப்ரெண்டன் மெக்கல்லம் போன்ற அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சென்னைக்கு விளையாடியதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார். அதனால் 200 ரன்களை அடிப்பதற்கு பெயர் போன சென்னை தற்போது பவர்பிளே ஓவரில் 50 ரன்கள் அடிக்கவே திணறுவதாக ஹர்பஜன் கவலை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

எப்படி இருந்த சென்னை:

அதற்கு காரணம் ஹைடன், ஹசி போன்ற ஜாம்பவான்கள் விளையாடிய ஓப்பனிங் இடத்தில் வேகமான பந்தைப் பார்த்தாலே உடலைக் குலுக்கும் ராகுல் திரிபாதி சுமாராக விளையாடுவதே காரணம் என்று ஹர்பஜன் வெளிப்படையாக பேசியுள்ளார். எனவே அவருக்கு பதிலாக 2023இல் 500+ ரன்கள் அடித்து கோப்பையை வெல்ல உதவிய டேவோன் கான்வே விளையாட வேண்டும் என்று ஹர்பஜன் அறிவுறுத்தியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சென்னை அடுத்தடுத்தப் போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. அவர்கள் நிறைய தவறுகளைச் செய்துள்ளனர். முதலில் அவர்கள் ராகுல் திரிபாதியை துவக்க வீரராக தேர்ந்தெடுத்துள்ளது தவறு. அவர் தனது உடலை அதிகமாக குலுக்குகிறார். ஆனால் அதற்கு தகுந்த ரன்கள் அடிக்கவில்லை. மன்னிக்கவும் திரிபாதி கடினமாக உழைக்கக்கூடிய நல்ல வீரர்”

- Advertisement -

கான்வே வரணும்:

“ஆனால் அவர் பிளேயிங் லெவனில் இருக்கக்கூடாது என்று நான் தெளிவாக சொல்கிறேன். பேட்டிங் செய்யும் போது நீங்கள் அதிகமாக உடலைக் குலுக்கினால் எப்போது பந்தைப் பார்ப்பீர்கள்? ரன்கள் வரவில்லை. தற்சமயத்தில் அதிரடியாக விளையாடும் ஆட்டமும் அவரிடம் தென்படவில்லை. ருதுராஜ் முழுமையான துவக்க வீரர். அவர் திரிபாதிக்காக தனது இடத்தை தியாகம் செய்து மூன்றாவது இடத்தில் விளையாடுகிறார்”

இதையும் படிங்க: என்ன ஆனாலும் சரி.. நாங்க இப்படித்தான் ஆடுவோம்.. அதுல மாற்றமே இல்ல – சன் ரைசர்ஸ் கோச் அதிரடி பேட்டி

“எப்போதும் மேத்தியூ ஹைடன், ட்வயன் ஸ்மித், மைக் ஹசி, ப்ரெண்டன் மெக்கல்லம், டேவோன் கான்வே போன்ற ஓப்பனிங் ஜோடி தான் சென்னை அணியின் பலமாக இருக்கும். கான்வே இப்போதும் அணியில் இருக்கிறார். ஆனால் பிளேயிங் லெவனில் இல்லை. பிளேயிங் லெவனில் திரிபாதி இடம் பெறக்கூடாது. கான்வே இடம் பெறத் தகுதியானவர்” என்று கூறினார்.

Advertisement