ஒரு வெற்றிக்கே இவ்வளவு திமிரா? திருந்தாமல் கர்வம் தலைக்கேறிய ரியான் பராக்கை விளாசும் ரசிகர்கள்

Riyan Parag
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 30ஆம் தேதி கௌகாத்தியில் நடைபெற்ற 11வது போட்டியில் ராஜஸ்தான் அணி சென்னை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. குறிப்பாக கடைசி ஓவரில் சென்னைக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட போது ஃபினிஷிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனி அவுட்டானார். அதனால் இந்த வருடம் தங்களது முதல் வெற்றியைப் பெற்று ராஜஸ்தான் நிம்மதி பெருமூச்சு விட்டது.

முன்னதாக இந்த வருடம் சஞ்சு சாம்சன் காயத்தைச் சந்தித்ததால் முதல் 3 போட்டிகளில் மட்டும் ரியான் பராக் ராஜஸ்தான் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. 2019 – 2023 வரை 5 வருடங்கள் மோசமாக விளையாடிய அவர் களத்திலும் சமூக வலைதளங்களிலும் விராட் கோலியை போல் செயல்படுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதனால் சிறப்பாக விளையாடி விட்டு பேசுங்கள் என்று ரசிகர்கள் அவரை கிண்டலடித்ததை மறக்க முடியாது.

- Advertisement -

வெறும் ஒரு வெற்றிக்கே:

அந்த நிலையில் 2024 சீசனில் உள்ளூரில் சிறப்பாக விளையாடிய ரியான் பராக் அதே வேகத்தில் ஐபிஎல் தொடரிலும் 500+ ரன்கள் குவித்து அசத்தினார். அதன் காரணமாக இந்த வருடம் அவருக்கு தற்காலிகமாக கேப்டன்ஷிப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அந்த வாய்ப்பில் முதல் போட்டியிலேயே ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தானை அடித்து நொறுக்கி துவம்சம் செய்த ஹைதராபாத் 286 ரன்கள் விளாசி சாதனை படைத்தது.

அடுத்ததாக கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியிலும் ராஜஸ்தான் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக ரியான் பராக் கேப்டன்ஷிப் பலராலும் விமர்சிக்கப்பட்டது. இருப்பினும் சென்னைக்கு எதிராக ஒரு சிக்ஸர் வித்தியாசத்தில் ராஜஸ்தான் போராடி வென்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்தப் போட்டி முடிந்ததும் கௌகாத்தி மைதானத்தின் பாதுகாவலர்கள் ரியான் பராக்கிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினர்.

- Advertisement -

ஏறிய தலைக்கனம்:

அதற்கு வேண்டாத வெறுப்பு நிறைந்த முகத்துடன் அவர்களின் செல்போனை வாங்கிய ரியான் பராக் பாதுகாவலர்களைச் சரியாக வரிசையாக நிற்குமாறு சொன்னார். அவர் சொன்னது போலவே பாதுகாவலர்கள் நின்று சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து ஃசெல்பி எடுக்கும் போது மட்டும் ரியான் பராக் முகத்தில் கொஞ்சமாக புன்னகையைக் காட்டி புகைப்படம் எடுத்தார்.

ஆனால் ஃசெல்பி எடுத்து முடித்ததும் அடுத்த நொடியே ரியான் பராக் கோபமான முகத்துடன் அந்த செல்போனை பாதுகாவலர்களின் கையில் கொடுக்காமல் தூக்கி எறிந்து விட்டுச் சென்றார். அதை பாதுகாவலர்கள் பத்திரமாக பிடித்துக் கொண்டனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: இந்த ஐ.பி.எல் தொடரில் நான் வீழ்த்த நினைக்கும் பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்.. பட்டியலிட்ட வருண் சக்ரவர்த்தி

அதைப் பார்க்கும் ரசிகர்கள் பேட்டிங்கில் வெறும் ஒரு வருடம் சிறப்பாக விளையாடி கேப்டனாக ஒரு போட்டியில் வென்றதற்கு இவ்வளவு திமிரா? என்றும் உங்களுக்கு வாழ்க்கை நல்ல பாடத்தை கற்பிக்கும் என்றும் ரசிகர்கள் ரியான் பராக்கை விளாசி வருகின்றனர். ஏனெனில் பல சாதனைகள் புரிந்த சச்சின், தோனி கூட தங்களது வாழ்நாளில் இப்படி நடந்து கொண்டதில்லை.

Advertisement