- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இது முடிவு கிடையாது.. இன்னும் ஸ்ட்ராங்கா அவர் கம்பேக் கொடுப்பாரு.. சுப்மன் கில் குறித்து – ஹர்பஜன் கருத்து

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் சூர்யகுமார் யாதவின் தலைமையில் 15 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த டி20 உலக கோப்பை அணியில் துணை கேப்டன் சுப்மன் கில் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது பலரது மத்தியிலும் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

சுப்மன் கில் பலமான கம்பேக் கொடுப்பார் : ஹர்பஜன் சிங்

ஏனெனில் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக இருக்கும் அவர் டி20 போட்டிகளிலும் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படுகிறார். அதனால் இந்த டி20 உலக கோப்பை தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக அவர் டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல் எதிர்வரும் டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்பட இருக்கிறார். ஆனாலும் டி20 போட்டிகளை பொறுத்த வரை உலக கோப்பை தொடருக்கு பின்னர் சூரியகுமார் யாதவ் நீக்கப்பட்டு புதிய கேப்டன் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்றும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

அப்படி புதிய கேப்டன் அறிவிக்கப்படும் பட்சத்தில் அதில் முதல் தேர்வாக சுப்மன் கில் தான் இருப்பார் என்றும் பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் டி20 போட்டிகளில் இருந்து சுப்மன் கில் நீக்கப்பட்டது குறித்து பேசியுள்ள முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கூறுகையில் : சுப்மன் கில் தற்போது நல்ல பார்மில் இல்லை என்பது உண்மைதான். ஆனாலும் அவரது டி20 கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்ததாக நான் கருதவில்லை.

- Advertisement -

ஏனெனில் அவர் ஒரு மிகச் சிறப்பான பேட்ஸ்மேன். டெக்னிக்கலாக மிகவும் வலிமையாக இருக்கும் அவருக்கு தற்போது ஒரு சிறிய இடைவெளி தேவைப்படுகிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதேபோன்று அணியின் காம்பினேஷனை கருத்தில் கொண்டே அவரை நீக்கி உள்ளதாகவும், அணிக்கு என்ன தேவையோ அதைத்தான் தேர்வு செய்துள்ளோம் என்று தேர்வுக்குழுவினர் அவரை நீக்கி உள்ளனர்.

இதையும் படிங்க : லியாம் லிவிங்ஸ்டனுக்கு நேர்ந்த சோகம்.. டி20 உ.கோ தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு – விவரம் இதோ

ஆனாலும் அவரை போன்ற ஒரு தரமான வீரர் எதிர்காலத்தில் நீக்க முடியாத வீரராகவும் இருப்பார் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகம் கிடையாது. நிச்சயம் அவர் இந்திய டி20 அணிக்கு மிகச் சிறப்பான கம்பேக்கை கொடுப்பார் அதோடு அவர் டி20 அணியின் கேப்டனாகவும் மாறுவார் என்று உறுதியாக நம்புவதாக ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -