கைரன் பொல்லார்டு போனா என்ன? இனிமே அவர் பாத்துப்பாரு பயப்படாதீங்க – ஹர்பஜன் சிங் ஓபன்டாக்

Harbhajan-and-Pollard
- Advertisement -

அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கான முன்னேற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் 23-ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக நேற்று இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து விடுவிக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜாம்பவான் வீரரான கைரன் பொல்லார்டு மும்பை அணியால் விடுவிக்கப்பட்டது பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியது. அதோடு மும்பை அணி வெளியேற்றிய கையோடு ஐபிஎல் தொடரில் இருந்து கைரன் பொல்லார்டு ஓய்வையும் அறிவித்திருந்தார்.

Kieron-Pollard

- Advertisement -

கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் மும்பை அணிக்காக விளையாடி வரும் பொல்லார்டு ஐந்து முறை மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றபோதும் அணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னர் 6 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்ட அவர் 11 போட்டிகளில் விளையாடி 144 ரன்கள் மட்டுமே குவித்ததன் காரணமாகவும், மோசமான பார்ம் காரணமாகவும் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அதனை தொடர்ந்து பொல்லார்டு ஓய்வையும் அறிவிக்கவே நேற்று முழுவதும் கைரன் பொல்லார்டு குறித்த பேச்சுகள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து இருந்தன. இந்நிலையில் பொல்லார்டு வெளியேறினாலும் அவருக்கு பதில் மாற்று வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இருக்கிறார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன்சிங் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Tim David MI vs RR

மும்பை இந்தியன்ஸ் அணி பொல்லார்டை வெளியேற்றியது மிக மிக கடினமான ஒரு முடிவு தான் ஆனாலும் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. எப்பொழுதுமே ஒரு பெரிய வீரரை சில அணிகள் தங்களது அணியில் இருந்து நீக்க நினைக்கும் போது அது ஒரு கடினமான முடிவாக தான் இருக்கும். ஆனாலும் அது போன்ற ஒரு கடினமான முடிவை அணியின் எதிர்கால நலன் கருதி எடுக்க வேண்டியது அவசியம் தான். அந்த வகையில் மும்பை அணியும் அடுத்த 4-5 ஆண்டுகளுக்கான பலமான அணியை கட்டமைக்கவே தற்போது பொல்லார்டை அணியிலிருந்து வெளியேற்றி உள்ளனர்.

- Advertisement -

அதே வேளையில் பொல்லார்டுக்கு இணையான பங்களிப்பை வழங்கும் வீரரையும் அவர்கள் தேர்வு செய்துள்ளதாகவே கருதுகிறேன். அந்த வகையில் ஏற்கனவே கடந்த ஆண்டு டிம் டேவிடை மும்பை அணி தங்களது அணியில் எடுத்திருந்தது. பொல்லார்டு எந்த வகையில் மும்பை அணிக்கு பலத்தை சேர்த்தாரோ அதே வகையில் டிம் டேவிட்-டால் போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக் கொடுக்க முடியும்.

இதையும் படிங்க : இது எங்க தன்மான பிரச்சனை. நீங்களும் பொல்லார்டு மாதிரி ரிட்டயர்டு ஆயிடுங்க – சி.எஸ்.கே ரசிகர்கள் கோரிக்கை

அது தவிர்த்து ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கேமரூன் கிரீன் இடம்பெற உள்ளார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்தும் அவரை மும்பை அணி பெரிய தொகையில் ஏலத்தில் எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே பொல்லார்டு சென்று விட்டார் என்று கவலைப்படாமல் அவரது இடத்தை பூர்த்தி செய்யும் வீரர்கள் இருக்கிறார்கள் என்று நிம்மதி அடையுங்கள் என ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement