இதே டீம்ல பெரிய பெயர் உள்ளவங்களை ஏன் விமர்சிக்கல – தடுமாறும் டிகே’வுக்கு ஒரே முன்னாள் வீரர் ஆதரவு

Dinesh-Karthik
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வரலாற்றில் 8வது முறையாக பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா இதுவரை 3 வெற்றிகளை பதிவு செய்துள்ள நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி போட்டியில் வென்று அரையிறுதிக்கு செல்ல தயாராகி வருகிறது. இந்த தொடரில் பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் அசத்தலாக செயல்பட்டு வரும் நிலையில் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய ஓப்பனிங் ஜோடியும் பினிஷிங் செய்ய வேண்டிய தினேஷ் கார்த்திக்க்கும் தடுமாற்றமாக செயல்பட்டு பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றனர்.

DInesh Karthik

- Advertisement -

அதிலும் குறிப்பாக 58 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியும் சிறப்பாக செயல்படாத ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக ஐபிஎல் 2022 தொடரில் அபாரமாக செயல்பட்டு கம்பேக் கொடுத்ததால் வாய்ப்பை பெற்ற தினேஷ் கார்த்திக் இதுவரை களமிறங்கிய 4 போட்டிகளிலும் சேர்த்து வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி ஓவரில் பினிஷிங் செய்யாமல் சொதப்பிய அவர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நன்கு செட்டிலாகியும் 5 (16) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

ஒரே ஆதரவு:
அதே போல் வங்கதேசத்துக்கு எதிராக வென்றாக வேண்டிய போட்டியிலும் அழுத்ததில் ரன் அவுட்டாகி சொதப்பினார். மறுபுறம் அவர் செய்த சொதப்பல்களை 2 முறை சமாளித்த ரவிச்சந்திரன் அஷ்வின் எப்படி செயல்பட வேண்டும் என்பதை செய்து காட்டி வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். அது போக விக்கெட் கீப்பிங் செய்வதிலும் தடுமாறும் தினேஷ் கார்த்திக்க்கு பதிலாக ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் சக்கை போடு போட்டு “காபா” போன்ற சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பளிக்குமாறு சேவாக், கம்பீர் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

RIshabh Pant Dinesh Karthik

ஆனால் தினேஷ் கார்த்திக் பேட்டிங் செய்யும் இடம் மிகவும் கடினமானது என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இதே உலக கோப்பையில் இதே இந்திய அணியில் ரோகித் சர்மா (74), கேஎல் ராகுல் (72), ஹர்டிக் பாண்டியா (47) போன்ற முக்கிய வீரர்கள் சுமாராக செயல்பட்டும் அவர்கள் மீது விமர்சனங்கள் வராதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர்கள் பெரிய பெயரை கொண்டவர்கள் என்பதால் விமர்சனங்கள் வரவில்லை என்று தெரிவிக்கும் அவர் 3 போட்டிகளை வைத்து தினேஷ் கார்த்திக்க்கை மதிப்பிடாமல் முழுமையான வாய்ப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தினேஷ் கார்த்திக் காயமடைந்த போது ரிசப் பண்ட்டை கொண்டு வர வேண்டுமென்று நான் சொன்னேன். ஆனால் அவர் ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் தொடர்ந்து விளையாடலாம் என்றும் சொல்லியிருந்தேன். ஏனெனில் அவர் பினிஷராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தில் நீங்கள் பண்ட்டை பயன்படுத்த முடியாது. அதே சமயம் இதர வீரர்கள் சுமாராக செயல்பட்டதையும் நீங்கள் பார்க்க வேண்டும். ஆனால் அவர்களை விட தினேஷ் கார்த்திக் குறைவான பெயரை பெற்றுள்ளதாலும் அவர்கள் பெரிய பெயரை பெற்றுள்ளதாலும் நாம் அவர்களைப் பற்றி பேசுவதில்லை. மேலும் அவர் களமிறங்கும் இடம் மிகவும் கடினமானது”

Harbhajan

“வரலாற்றில் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அங்கு சிறப்பாக விளையாடினார்கள். பின்னர் பாண்டியா விளையாடினார். இப்போது தினேஷ் கார்த்திக் வந்துள்ளார். எனவே அவருக்கு நாம் முழுமையான வாய்ப்பளிக்க வேண்டும். இந்த வாய்ப்புக்காக கடினமாக உழைத்து அவர் இங்கு வந்துள்ளார். அதனால் 3 வாய்ப்புகளை வைத்து அவரை மதிப்பிடக் கூடாது. அத்துடன் டாப் ஆர்டருக்கு நாம் கொடுக்கும் அதே ஆதரவை லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கும் கொடுக்க வேண்டும். எப்போதுமே அனைவருக்கும் சமமான ஆதரவை கொடுங்கள்” என்று விமர்சனங்களுக்கு மத்தியில் ஒரே ஆதரவாக பேசினார்.

Advertisement